டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலைமை ரொம்ப மோசமாகிறது.. டெல்லிக்கு ராணுவத்தை கூப்பிடுங்கள்.. கெஜ்ரிவால், யெச்சூரி அபய குரல்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் காவல்துறையால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் உடனடியாக ராணுவத்தை அழைக்க வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராமன் யெச்சூரியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 20 பேர், இந்த மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

Army should be called in Delhi: Arvind Kejriwal

காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. பல்வேறு வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இதை நிரூபிக்கும் வகையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் ஆகியோர் ஆலோசனை நடத்தி இருந்தனர்.

ஆலோசனையின்போது தேவைப்பட்டால் ராணுவத்தை வரவழைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டு இருந்தது. ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வன்முறைகளை கட்டுப்படுத்தும் என்று அமித்ஷா உறுதி அளித்துள்ளார். ஒருவேளை தேவைப்பட்டால் ராணுவத்தை வரவழைக்கலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால், டெல்லியில் நேற்று மாலை, இரவு என தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. இன்றும் கூட நிலைமை கட்டுக்குள் வரவில்லை. வட கிழக்கு டெல்லி பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கூட வன்முறையை கட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "டெல்லியில் நிலைமை மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. காவல்துறை எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் கூட நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க முடியவில்லை. எனவே பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ராணுவம் வரவழைக்கப்பட்ட வேண்டும். இதுதொடர்பாக உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்." இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீதாராம் யெச்சூரி இன்று மாலை கூறுகையில், ராணுவத்தில் அழைப்பதைத் தவிர டெல்லியில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீட்டெடுக்க வேறு வழியில்லை, என்று தெரிவித்துள்ளார்.

English summary
I have been in touch wid large no of people whole nite. Situation alarming. Police, despite all its efforts, unable to control situation and instil confidence. Army shud be called in and curfew imposed in rest of affected areas immediately. Am writing to Hon’ble HM to this effect, says Arvind Kejriwal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X