டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செப். 7 இந்தியாவுக்கு மட்டுமல்ல பிரதமர் மோடிக்கும் முக்கியமான நாள்.. 100வது நாளில் செம்ம பிளான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Modi 2.0 government : achievements list out on septemper 7

    டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு 370வது பிரிவு ரத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவை இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் முக்கியமானவை ஆகும்.

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக மீண்டும் கடந்த மே மாதம் 30ம் தேதி ஆட்சிக்கு வந்தது.

    இந்த அரசு பதவியேற்று விரைவில் 100 வது நாளை எட்ட உள்ளது. வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று 100 நாளை மோடி 2.0 அரசு எட்டுகிறது.

     புத்தகமாக வெளியீடு

    புத்தகமாக வெளியீடு

    இந்லையில் கடந்த 100 நாள்களில் அனைத்து துறை அமைச்சகங்களிடமும் என்னென்ன வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. மத்திய அரசின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. 100 நாள் சாதனையை அரசு பெரிய அளவில் விளம்பரப்படுத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

     நிலாவில் சந்திரயான் 2

    நிலாவில் சந்திரயான் 2

    மோடி 2.0 அரசின் 100வது நாளான செப்டம்பர் 7ம் தேதி தான் நிலாவில் சந்திரயான் 2 தரையிறங்குகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் இருந்து பிரதமர் மோடி 12க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க உள்ளார். மோடி அரசின் 100 வது நாளில் நிலாவில் சந்திரயான் 2 தரையிறங்குவதும் மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.

    விளம்பரப்படுத்த முடிவு

    விளம்பரப்படுத்த முடிவு

    ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசன பிரிவு 370வது ரத்து, முத்தலாக் தடை சட்டம் ரத்து, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவற்றை பெரிய அளவில் விளம்பரப்படுத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்டுகிறது. அரசின் இந்த நடவடிக்கை விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற உதவும் என்று சொல்லப்படுகிறது.

    100 நாள் ரிப்போர்ட் கார்டு

    100 நாள் ரிப்போர்ட் கார்டு

    இதனிடையே மோடி அரசின் முந்தைய ஆட்சியில் போல் இல்லாமல் ஒவ்வொரு 100 நாள்களுக்கு ஒருமுறை என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட்டது என்பது குறித்து ரிப்போர்ட் கார்டு சமர்பிக்குமாறு அனைத்து துறை அமைச்சர்களுக்கும் மோடி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக ஒவ்வொரு அமைச்சகத்திலும் நல்லாட்சி பிரிவு என்ற பெயரில் ஒரு குழுவை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    modi 2.0 government. achievements list out on septemper 7, Abrogation of Article 370 in J&K, passing of the triple talaq Bill in Parliament and initiatives on the economic front will top the list
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X