டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்... ராஜீவ், ராகுலை விடுங்க... 'அருண்ஜேட்லி''தான் பதில் சொல்லனும்.. ஏன்?

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் களம் 1980-90களைப் போல ராஜீவ் காந்தியை மையப்படுத்தி பரபரத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தற்போது பேசும் ராஜீவின் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்கள் தொடர்பான பல கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிதான் பதிலளிக்க வேண்டும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

1987... நாட்டின் அரசியல் போக்கு கத்திரி வெயிலைப் போல வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது அமலாக்கத்துறையுடன் பல்வேறு வழக்குகள் தொடர்பாக நெருக்கமான தொடர்பில் இருந்தார் இன்றைய அமைச்சர் அருண்ஜேட்லி.

அந்த கால கட்டத்தில் அமெரிக்காவின் தனியார் புலனாய்வு அமைப்பு வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கப்படுவது குறித்த ஆவணங்களை வெளியிட்டது. இதை 1987 மார்ச் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆடிட்டர் குருமூர்த்தி கட்டுரைகளாக வெளியிட்டார். குருமூர்த்திக்கு ஆதரவாக ஜேட்லியும் ஜேத்மலானியும்தான் இருந்தனர்.

டெல்லியில் வாக்குப்பதிவு நாளில் அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை! டெல்லியில் வாக்குப்பதிவு நாளில் அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை!

அம்பானி - ராஜீவ் உறவு

அம்பானி - ராஜீவ் உறவு

மேலும் காங்கிரஸ், அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குமான தொடர்புகள் குறித்த கட்டுரைகளையும் குருமூர்த்தி வெளியிட்டார். அப்போதுதான் வி.பி.சிங் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ராஜீவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் போபர்ஸ் விவகாரம் வெடிக்க உச்சகட்ட விவாதங்கள் நடைபெற்றன.

போபர்ஸ் பீரங்கி ஊழல்

போபர்ஸ் பீரங்கி ஊழல்

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அம்பலப்படுத்தியதில் குருமூர்த்தியுடன் அருண் ஜேட்லி, அருண் ஷோரி உள்ளிட்ட ஏராளமான பாஜக பிஅமுகர்கள் உடனிருந்தனர். 1989-ல் வி.பி.சிங்கின் ஜனதா தள், பாஜக ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அத்தேர்தலில் பாஜக 86 இடங்களைக் கைப்பற்றியது. அதில் அருண்ஜேட்லியின் வியூகங்கள் பிரதானமாக இருந்தது. 37 வயதான அருண்ஜேட்லி கூடுதல் சொலிசிட்டர் ஜெனராலகவும் இருந்தார்.

விசாரணைக் குழுவில் ஜேட்லி

விசாரணைக் குழுவில் ஜேட்லி

1990-ம் ஆண்டு அருண்ஜேட்லி உள்ளிட்டோரை கொண்ட ஒரு விசாரணைக் குழு போபர்ஸ் ஊழலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டது. இக்குழு 8 மாதங்களாக சுவிஸ் சென்று போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து விசாரணை நடத்தியது. ஆனால் இக்குழுவால் எந்த ஒரு ஆவணங்களையும் கொண்டு வரவில்லை.

அருண்ஜேட்லி பதில் சொல்வாரா?

அருண்ஜேட்லி பதில் சொல்வாரா?

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை வெளியிடுவதிலும் விசாரணையிலும் இடம்பெற்றவர் அருண்ஜேட்லி. அப்படியானால் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவின் தொடர்பு என்ன? டெல்லி நீதிமன்றம் ஏன் ஆதாரம் இல்லை என கூறியது? என்பது உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடியவராகவும் அருண்ஜேட்லி இருந்து வருகிறார் என்பதுதான் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து.

English summary
Senior Journalists had raised the question of Union Minister Arun Jaitley who also exposed the Bofors Scam in 1987 will speak on it now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X