டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை!

இரு பெரும் நிகழ்வுகளில் அருண்ஜெட்லியின் திறமை வெளிப்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    பழைய வழக்கங்களை மாற்றி அதிரடி முடிவுகளை எடுத்த அருண் ஜெட்லி | Arun Jaitley Biography

    டெல்லி: இந்திய நாட்டினையே அசைத்து பார்க்கும்.. இரு பெரும் செயல்பாடுகளில்.. அருண்ஜெட்லியின் பங்கு அதிகமானதே! ஒன்று ஜிஎஸ்டி.. இன்னொன்று பண மதிப்பிழப்பு!

    'ஓர் நாடு, ஒரே வரி விதிப்பு முறை' என்ற கோஷம் நாட்டை உலுக்கும் என்று நம் யாருக்குமே ஆரம்பத்தில் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

    பல வருட கால முழக்கம் இது.. ஆனால் யார் இதை அமல்படுத்துவது என்பதில்தான் திறமையே அடங்கி இருந்தது. அதனால்தான் முழக்கத்தை அமல்படுத்த முரண்களும் எழுந்து சிக்கலாயின.

    ஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர் ஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்

    பிரதமர்

    பிரதமர்

    மன்மோகன் சிங் அரசு எவ்வளவோ முயற்சித்தும் இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.. அவ்வளவு ஏன்.. மோடி முதல் முறை பிரதமராக இருந்தபோதுகூட இந்த ஜிஎஸ்டியை போதிய உறுப்பினர் இல்லாததால் கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    இந்த சமயத்தில்தான் அருண்ஜெட்லியின் திறமை பளிச்சிட்டது. மாநில நிதி அமைச்சர்களை கூட்டினார்.. இந்த திட்டங்களை அமல்படுத்த தன்னால் முடிந்த அனைத்து பங்கையும் வெளிப்படுத்தினார். யார் என்ன சொன்னாலும், எத்தனை எதிர்ப்புகள், கண்டனங்கள், விமர்சனங்கள் தன்னை நோக்கி பாய்ந்தாலும் அதை அமல்படுத்த துணிந்தார் அருண்ஜெட்லி.

    நிதி திட்டம்

    நிதி திட்டம்

    சட்டத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் அருண்ஜெட்லி, இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவுகளை மிக அழகாக அவையில் எடுத்துரைத்தார். அனைத்து தரப்பினரையும் சமாளித்து, சம்மதிக்க வைப்பது என்பது லேசுபட்ட காரியம் இல்லை. அருண்ஜெட்லி கற்ற சட்ட நுணுக்கத்தின் ஏராளங்கள்தான்.. இந்த நிதி திட்டத்தின் கொள்கை, மற்றும் அதன் செலவினங்களை புட்டு புட்டு வைக்க காரணமாக இருந்தது.

    பணமதிப்பிழப்பு

    பணமதிப்பிழப்பு

    இது மட்டுமில்லை.. திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தவுடன் திக்கு முக்காடி போயினர் நம் மக்கள். அது என்ன பணமதிப்பிழப்பு.. அப்படின்னா என்ன.. யாரை கேட்பது, யார் புரிய வைப்பார்கள், யார் தெளிவுபடுத்துவார்கள்.. என்பதே நாட்டு மக்களின் அப்போதைய குழப்பமாக இருந்தது.

    பற்றாக்குறை

    பற்றாக்குறை

    ஆனால், அந்த நேரத்தில் நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லியே இதை சாதுர்யா பேச்சால் எடுத்துரைத்து விளக்கினார். பலமுறை தெளிவுபடுத்தினார். ரூபாய் நோட்டு பற்றாக்குறையை சமாளித்ததில் அருண்ஜெட்லியின் செயல்பாடுகள் வியக்க வைக்கும் வகையிலேயே இருந்தது.

    தெளிவு

    தெளிவு

    இந்த பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தி 2 வருஷம் ஆனாலும், இதற்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிப்பவர்களுக்கு இறுதிவரை தனது விளக்கத்தை தந்து வந்தார் அருண்ஜெட்லி. "ரூபாய் நோட்டை தடை செய்வது என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் அல்ல. நாட்டில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய இலக்கு" என்பதை தெளிவாக விளக்கியே வந்தார்.

    தவிர்க்கவே முடியாதவர்

    தவிர்க்கவே முடியாதவர்

    நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அதிமுக்கிய நடவடிக்கையான பணமதிப்பிழப்பு விவகாரம் ஆனாலும் சரி, ஜிஎஸ்டி விவகாரம் ஆனாலும் சரி.. இரண்டிலுமே அருண்ஜெட்லியின் பங்கு அதிமுக்கியமானது.. தவிர்க்க முடியாதது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!

    English summary
    Arun Jetley Passes Away: Arun Jetleys big role in GST and Demonetisation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X