டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி!

அருண்ஜெட்லி அதிசய பிறவி.. குணாதிசயங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    பழைய வழக்கங்களை மாற்றி அதிரடி முடிவுகளை எடுத்த அருண் ஜெட்லி | Arun Jaitley Biography

    டெல்லி: வாழும்போதே திறமை மிக்க நபர்களை.. காலம் அரிதாகதான் நமக்கு காட்டும்.. அந்த வகையில் அருண்ஜெட்லியை அவர் வாழும் காலத்திலேயே அவரது குணாதிசயங்களை அறிந்தவர்கள் இந்திய மக்கள்!

    சின்ன வயதிலேயே நல்ல படிப்பு, அறிவு, என்பது பொதுவான விஷயம்தான்.. ஆனால் அசாத்திய துணிச்சல்தான் அருண் ஜெட்லியின் அழிக்க முடியாத அடையாளமாக நின்றுவிட்டது!

    கல்லூரி காலங்களிலேயே துணிச்சலான செயல்பாடுகள் கட்சி தலைவர்களை ஈர்த்திருந்தன. எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, 19 மாதங்கள் அனுபவித்த சிறைவாசம் பல நுணுக்கங்களை கற்று கொடுத்தது.. சட்டம் படிக்க தூண்டுகோலானது. இதுதான் அவருக்கு பின்னாளில் டெல்லி ஹைகோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை வாதாட அடித்தளமாகவும் அமைந்தது.

    2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley 2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley

    விசி சிங்

    விசி சிங்

    பலசந்தர்ப்ப, சூழ்நிலைகளையும் தாண்டி.. எப்படியோ இவர் விபி சிங் கண்ணில் பட்டுவிட்டதுதான் அரசியல் வாழ்வின் உச்சத்துக்கு செல்ல அடித்தளமாக அமைந்தது. அருண்ஜெட்லி ஒரு இளைஞர் என்று கூட விபி சிங் என்ற மாமனிதர் பார்க்கவில்லை.. திறமையை நன்கு அறிந்து வைத்திருந்தார். அதனால்தான், மத்திய வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்கும்படி வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டார்.

    ஊக்குவிப்பு

    ஊக்குவிப்பு

    இது விபிசிங்கின் ஊக்குவிப்பு என்று எடுத்து கொண்டாலும், அதை நாசூக்காகவும், நாகரீகமும், பணிவுடனும் மறுத்தார் அருண்ஜெட்லி. இதற்கு காரணம், கட்சியில் தன்னை விட நிறைய சீனியர்கள் இருந்ததால்தான்! இப்படி தேடி வந்த பதவிகளையும், சீனியர்களுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்றவர் அருண்ஜெட்லி! இந்த குணம் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்பது ஆச்சரியம்தான்!

    வாஜ்பாய்

    வாஜ்பாய்

    மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய இணைஅமைச்சராக நியமிக்கப்பட்ட, அருண்ஜெட்லி, தன்னுடைய திறமையால் ரொம்ப சீக்கிரமாகவே கேபினட் அந்தஸ்துக்கு உயர்ந்தார். மோடி அரசின் வரிவிதிப்பு முறையிலும் அருண்ஜெட்லியின் பங்கு அதிகம்தான்.

    நிதி கொள்கை

    நிதி கொள்கை

    டெல்லி ஹைகோர்ட்டின் வக்கீலாக இவர் நியமனம் செய்யப்பட்டபோதே, பல முக்கிய, சிக்கலான வழக்குகளை மிக சாதுர்யமாக கையாண்ட அருண்ஜெட்லிக்கு, அரசின் நிதி கொள்கை குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்வதில் அவ்வளவு கஷ்டம் இருந்ததில்லை. ஒவ்வொரு நிதி திட்டங்களையும், அதற்கான செலவினங்களுடன் இவர் எடுத்துரைக்கும் பாங்கு, அலாதியானது.

    அதிசயம்

    அதிசயம்

    யாரையுமே கெடுக்காமல், யாருக்குமே பயப்படாமல், நேர்மையான பாதையில் அனைத்து பொறுப்புகளையும் வகித்து முடித்த அருண்ஜெட்லி.. இந்தியாவின் ஒரு அதிசயம்தான்!

    English summary
    Former Finance Minister Arun Jaitley Passes away: He had many special characteristics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X