டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: அருணாச்சல பிரதேசம் மற்றும் நேபாள நாட்டில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளமும், இந்தியாவின் அருணாச்சல பிரதேசமும், பூகோள ரீதியில் அருகேயுள்ள பகுதிகள். இந்த நிலையில்தான், அருணாச்சல பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 என இது பதிவாகியுள்ளது.

Arunachal Pradesh and Nepal hit by 5.8-Magnitude earthquake

இந்த நிலையில், இன்று, அதிகாலை 6.14 மணியளவில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். ரிக்டர் அளவுகோலில் இது 4.8 என்று பதிவாகியிருந்தது. இதன்பிறகு அங்கு, 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஈஸ்டர் நாளில் தேவாலயத்தில் பிரச்சினை... பஞ்சாங்கத்தில் முன்னாடியே கணிச்சிருக்காமே!ஈஸ்டர் நாளில் தேவாலயத்தில் பிரச்சினை... பஞ்சாங்கத்தில் முன்னாடியே கணிச்சிருக்காமே!

தாடிங் மாவட்டம் நவ்பிசி பகுதியில் காலை 6.29 மணியளவில் 5.2 என்ற அளவு, 6.40 மணியளவில் 4.3 என்ற அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நேபாள நாட்டின் தேசிய அவசர செயல்பாட்டு மையம் தெரிவிக்கிறது.

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டம்தான், நிலநடுக்கத்தின் மையப் புள்ளியாக கூறப்படுகிறது.

English summary
Arunachal Pradesh was the epicentre of an earthquake that occurred in the wee hours of Wednesday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X