• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

டெல்லி வன்முறை.. போலீசார் எதுவும் செய்ய முடியவில்லை.. ஆர்டருக்காக காத்திருந்தனர்.. கெஜ்ரிவால் பகீர்

|

டெல்லி: டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி எடுக்க முடியவில்லை, அவர்கள் கைகள் கட்டிப்போடப்பட்டிருந்தது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் மற்றும் அவை சார்ந்த சம்பவங்களில், தலைமை கான்ஸ்டபிள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

Arvind Kejriwal blame police for Delhi violence

நிலைமை அத்துமீறி போனபோதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட ட்வீட்டில், "டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலை குறித்து நான் கவலைப்படுகிறேன். வன்முறையை கைவிடுமாறு அனைத்து தரப்பையும், கேட்டுக்கொள்கிறேன். டெல்லியில் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் மூத்த தலைவர்களையும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்க அமித் ஷா நேற்று, அகமதாபாத், சென்றிருந்தார். இரவு அவர் டெல்லி திரும்பியதும், சட்டம் ஒழுங்கு குறித்து ஷா ஆய்வு செய்ததாகவும், விரைவில் நிலைமையை சீராக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த, அரவிந்த் கெஜ்ரிவால், கூறியதாவது: காவல்துறையினர் தங்கள் சீனியர்களிடமிருந்து உத்தரவுகளைப் பெறாததால், வன்முறைக்கு எதிராக, எதுவும் செய்ய முடியவில்லை. இந்த விவகாரத்தை, நான் அமித் ஷாவிடம் கொண்டு செல்ல உள்ளேன்.

சீனியர்களிடமிருந்து உத்தரவு இல்லாமல் கண்ணீர்ப்புகை அல்லது லத்தி சார்ஜ் செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை போலீசாரால் தீர்மானிக்க முடியாத நிலை நிலவியுள்ளது. கொல்லப்பட்ட கான்ஸ்டபிள் மற்றும் காயமடைந்த மற்றவர்கள் அனைவரும் எங்கள் மக்கள்தான், அவர்கள் டெல்லி மக்கள். இது ஒரு நல்ல சூழ்நிலை கிடையாது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மற்ற கட்சிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை அழைத்துள்ளேன். வெளியில் இருந்து ஆட்கள் வந்து வன்முறைமுயில் ஈடுபட்டு, டெல்லி நிலைமையை மோசமாக்க முயற்சிக்கிறார்கள். டெல்லி எல்லையை சில காலம் சீல் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
 
 
English summary
Am worried abt prevailing situation in certain parts of Delhi. All of us together shud make all efforts to restore peace in our city. I again urge everyone to shun violence, says Delhi cm Arvind Kejriwal.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X