டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result|பெண்கள் மத்தியில் உயர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி: டெல்லி மாநிலத்தை உபரி வருவாய் உள்ள மாநிலமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாற்றியுள்ளதாக மும்பை மாநகர காங்கிரஸின் முன்னாள் தலைவர் மிலிந்த் தியோரா வெகுவாக பாராட்டி உள்ளார். இதை பார்த்து கொதித்து போன காங்கிரஸ் கட்சியினடல அவரை கடுமையாக தாக்கி வருகிறார்கள்.

    ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவாலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியாரோ வெகுவாக பாராட்டி டுவிட் போட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "வெளியே தெரியாத மற்றும் வரவேற்க வேண்டிய ஒரு உண்மையை நான் இப்போது பகிர்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை டெல்லி அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநில வருவாயை இரட்டிப்பாக பெருக்கியுள்ளனர். வருவாய் உபரியையும் பராமரித்து வருகிறார்கள். டெல்லி இப்போது இந்தியாவிலேயே முன் எச்சரிக்கையான விவேகமான மாநிலமாகி உள்ளது" என்றார்.

    Arvind Kejriwal-led Delhi Government doubled its revenues to ₹60,000 crore: Milind Deora

    இதை பார்த்து கொதித்து போன டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்கள் கடும் பதிலடி கொடுத்துள்ளனர். அஜய் மாக்கன் வெளியிட்ட பதிவில், "சகோதரா, காங்கிரஸை விட்டு விலக முடிவெடுத்தால் தயவு செய்து செய்யுங்கள், பிறகு இந்த மாதிரியான அரைகுறை உண்மைகளை பரப்புங்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, 2013-14-ல் ரூ.37,459 கோடி வருவாய் ஈட்டியது. அதாவது 14.87% வளர்ச்சி, இது இப்போது ரூ.60,000 கோடியாக அதிகரித்திருக்கிறது என்றாலும் வளர்ச்சி விகிதம் 9.90% தான், எனவே குறைந்துதான் உள்ளது என்றார்.

    சாந்த்னி சவுக்கின் முன்னாள் எம்.எல்.ஏ அல்கா லாம்பா, தியோராவை கடுமையாக விமர்சித்துள்ளார், "அப்பாவின் பெயரால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் தியோரா, அப்பாவிற்கு பின் மகன் என்று வம்சாவளி என்ற காரணத்தால் தேர்தலில் டிக்கெட் பெற்றவர், காங்கிரஸ் கட்சி இப்போது தோற்றுள்ளது. இப்போது கட்சிக்காக போராட வேண்டிய நேரத்தில், கிதார் வாசிக்கிறார்" என்று சாடியுள்ளார்.

    Arvind Kejriwal-led Delhi Government doubled its revenues to ₹60,000 crore: Milind Deora

    மற்றொரு காங்கிரஸ் தலைவர் ராதிகா கேரா,இன்னும் ஒரு படிமேல போய், இப்போது நாம் கட்சியை ஊக்குவிக்க வேண்டியவரகளே இப்படி ஆம் ஆத்மியை ஆதரிக்கிறார்களே என கவலை தெரிவித்தார். 1994 முதலே டெல்லி உபரி வருவாய் உள்ள மாநிலமாகவே திகழ்கிறது என்றும் 2011-ல் ஷீலாஜியின் ஆட்சியில் உச்சம் சென்றது என்றும் கூறினார்.

    மொத்தமாக திரும்ப பெறுகிறோம்.. கொரோனாவால் சீனா செய்யும் ''டீமானிடைசேசன்''.. ஷாக் நடவடிக்கை! மொத்தமாக திரும்ப பெறுகிறோம்.. கொரோனாவால் சீனா செய்யும் ''டீமானிடைசேசன்''.. ஷாக் நடவடிக்கை!

    English summary
    Milind Deora on twitter: Sharing a lesser known & welcome fact — the Arvind Kejriwal-led Delhi Government doubled its revenues to ₹60,000 crore & maintained a revenue surplus over the last 5 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X