டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக என்னைத் தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறது.. கெஜ்ரிவால் பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக தனது உயிருக்கு குறி வைத்துள்ளதாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றது முதல் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது.

arvind kejriwal says he has threat from BJP

கட்சி ரீதியான மோதல் போக்கு ஒருபுறம் என்றால் ஆட்சியிலும் மத்திய அரசு ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்து வருவதாக அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இதனையடுத்து அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கா அல்லது ஆளுநருக்கா என்ற போட்டி வந்தபோது நீதிமன்றம் தலையிட்டு தெரிந்து எடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே அதிகாரம் என்று தீர்ப்பளித்தது.

இதன் பிறகும் ஆம் ஆத்மீக்கும் பாஜகவுக்கும் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே 11 மே 11ஆம் தேதி டெல்லி மோத்தி நகர் பகுதியில் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது, திடீரென கூட்டத்திலிருந்து எழுந்த வந்த நபர் ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முகத்தில் அறைந்தார். இது பாஜகவின் தூண்டுதலால்தான் நடைபெற்றது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.ஆனால் அந்த நபர் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிருப்தியாளர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது.

அவர் வந்தால்தான் சரியாக இருக்கும்.. சோனியா களமிறங்க இதுதான் காரணம்.. காங். அசத்தல் பிளான்! அவர் வந்தால்தான் சரியாக இருக்கும்.. சோனியா களமிறங்க இதுதான் காரணம்.. காங். அசத்தல் பிளான்!

இந்நிலையில் தனது உயிருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள உள்ளூர் தொலைகாட்சி ஒன்றுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பேட்டியில் கூறிய அரவிந்த் கேஜ்ரிவால் இந்திரா காந்தியை கொன்றது போலவே தன்னையும் பாஜக கொல்ல முயற்சித்து வருகிறது என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை வைத்தே தன்னை கொலை செய்ய முயற்சிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது பாதுகாப்பு அதிகாரிகள் பாஜகவுக்கு தொடர்ந்து தகவல் அளித்து வருவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாஜக என்றாவது ஒருநாள் தன்னை கொன்று விடும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாபில் நடைபெறும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

English summary
Delhi CM Arvind Kejriwal has said that he has life threat from BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X