டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

We shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    We shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால் - வீடியோ

    டெல்லி: டெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவின் போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்தையும் கடப்போம் என்ற பாடலின் இந்தியாக்கமான ஹோங்கே காம்யாப் ("Hum Honge Kamyaab") என்ற பாடலை பாடினார்.

    டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் டெல்லியில் 3ஆவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது.

    இதற்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அவர் பேசுகையில் டெல்லி மக்களின் மகன் முதல்வராகியிருப்பதால் எந்தவித கவலையும் படத்தேவையில்லை.

    தர்பார் சும்மா கிழி போல்.. லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி.. இந்த பாட்டையும் காப்பியடித்தாரா அனிருத்?தர்பார் சும்மா கிழி போல்.. லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி.. இந்த பாட்டையும் காப்பியடித்தாரா அனிருத்?

    பாடல்

    பாடல்

    டெல்லி மக்களும் எனது குடும்பத்தினராகவே பாவிக்கிறேன் என்றார். டெல்லியில் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை நாடுகிறேன் என்றும் தெரிவித்த அவர் இந்த மேடையிலேயே பிரதமர் மோடியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார். இந்த விழாவின் இறுதி கட்டத்தில் வந்த அவர் ஒரு பாடலையும் பாடினார்.

    பிரார்த்தனை

    பிரார்த்தனை

    ஹம் ஹோங்கே காம்யாப் ("Hum Honge Kamyaab") எனத் தொடங்கும் பாடலை பாடினார். ஆனால் இந்த பாடலை பாடுவதற்கு முன்னர் பார்வையாளர்களிடம் கெஜ்ரிவால் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் நான் ஒரு வரி பாடியதும் அதே வரியை நீங்களும் பாட வேண்டும். இது ஒட்டுமொத்தமாக நமது கனவை நிறைவேற்றுவதற்கான பிரார்த்தனை என்றார்.

    போராட்டக் கீதம்

    போராட்டக் கீதம்

    அப்போது அனைவரும் கெஜ்ரிவாலுடன் பாடினர். இந்த பாடல் இந்தி புலவர் கிரிஜா குமார் மாத்தூரால் மொழிபெயர்க்கப்பட்டது. உண்மையில் சொல்ல போனால் இந்த பாடல் கடவுள் உபதேச பாடலான "we shall overcome" என்ற பாடலின் இந்தி மொழிப்பெயர்ப்பு ஆகும். இந்த ஆங்கிலப் பாடல் கடந்த 1960ஆம் ஆண்டு சிவில் உரிமைகள் இயக்கத்தின் போது போராட்ட கீதமாக இசைக்கப்பட்டது.

    சகோதரத்துவம்

    இதன் அர்த்தம் அனைத்தையும் கடந்து போவோம். அது போல் கடந்த இரு முறை முதல்வராக பதவியேற்ற போது பைகாம் (Paigham) என்ற பழைய இந்தி படத்தில் வரும் Insan ka ho insan se bhaichara என்ற தேசபக்தி பாடலை பாடினார். மனிதர்களிடயே சகோதரத்துவம் என்ற கருத்தை பரப்புவோம் என்பதே இதன் அர்த்தமாகும். இந்த பாடலை ஊழலுக்கு எதிரான பிரச்சாரங்களின் போதும் அவர் பாடுவது வழக்கம்.

    English summary
    Arvind Kejriwal sings "Hum Honge Kamyaab" at his third oath taking ceremony. It is different song from his last 2 oath events.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X