டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா!

Google Oneindia Tamil News

Recommended Video

    AAP invited Baby Mufflerman |கெஜ்ரிவால் பதவியேற்பு.. குட்டி குழந்தைக்கு அழைப்பு

    டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றார். கெஜ்ரிவாலுடன் 6 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

    கடந்த வாரம் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.பாஜக வெறும் 7 இடங்களில் மட்டும் வென்றது அக்கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    Arvind Kejriwal sworn in as the Delhi Chief Minister for the third time in the row today

    ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, அதிஷி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஷாகீன் பாக் போராட்டம் நடக்கும் ஓஹ்லா தொகுதியில் ஆம் ஆத்மியின் அமனதுல்லா கான் வெற்றி பெற்றார். கடந்த 2015 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வென்றது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 63 இடங்களில் ஆம் ஆத்மி வென்றுள்ளது.

    இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 53.68% வாக்குகள் பெற்றுள்ளது. பாஜக 38.45% வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 4.84% வாக்குகள் பெற்றுள்ளது. இதன் மூலம் மாபெரும் பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லியின் முதல்வராகி உள்ளார்.

    இன்று டெல்லியில் இவரின் பதவி ஏற்பு விழா நடந்தது. ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், டெல்லியின் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றது. ஆம் ஆத்மி அமைச்சரவையில் ஒரு பெண் எம்எல்ஏ கூட இடம்பெறவில்லை. இன்று மொத்தம் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

    மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெஹ்லாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர்இன்று நடைப்பெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், கெஜ்ரிவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

    அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவால் வேடம் அணிந்து ஆம் ஆத்மி அலுவலகத்தில் கொண்டாடிய சிறுவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    English summary
    Delhi Chief Minister Sworn In: Arvind Kejriwal to take the seat for the third time in the row in the capital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X