டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுங்க, அமைதியை உறுதி செய்யுங்க.. கெஜ்ரிவால் அமித்ஷாவுக்கு வேண்டுகோள்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி மஜ்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும் ஆதரவானவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் தலைமைக்காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். உயர்அதிகாரி ஒருவரும் காயம் அடைந்தார். வடக்கு டெல்லியில் நிலைமை மோசமாக உள்ளது.

 Arvind Kejriwal urge Amit Shah to restore law and order ensure that peace in delhi

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாகவும் அதற்கு எதிராகவும் நடைபெறும் வன்முறைகளை "துன்பகரமான செய்தி" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட் பதிவில். "டெல்லியின் சில பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என மாண்புமிகு துணை நிலை ஆளுநர் அவர்களும் மற்றும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களையும் நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். வன்முறையில் ஈடுபட யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை சம்பங்கள் அதிகரித்துள்ளது. போராட்டங்களும் அதிகரித்துள்ளது.

English summary
Delhi Chief Minister Arvind Kejriwal urge Union Home Minister Amit Shah to restore law and order ensure that peace and harmony is maintained.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X