டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா உள்துறை அமைச்சராகப் போகிறாராம்.. நாடு என்னாகப் போகுதோ.. கெஜ்ரிவால் கவலை!

Google Oneindia Tamil News

டெல்லி: மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் அமித்ஷா நாட்டின் உள்துறை அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. அமித் ஷா போன்ற ஒருவர் உள்துறை அமைச்சரானால், நாடு என்னாகும்.. மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலின் 6 வது கட்டம் நாளை மறுநாள் அதாவது 12- ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் ஆகிய 7 தொகுதிகளிலும் தற்போது தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

arvind kejriwal warns people of Amit Shahs victory

டெல்லியில் இந்த தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் காங்கிரஸ் தனித்து களம் காண்பதாக அறிவித்து விட்டது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. பாஜக, காங்கிரசம் ஆம் ஆத்மி என அனைத்து கட்சித் தலைவர்களும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்குவங்கத்தில் உங்களால் பணப்பெட்டிகளை கொண்டு தேர்தல் நடத்த முடியாது.. மமதா வார்னிங்! மேற்குவங்கத்தில் உங்களால் பணப்பெட்டிகளை கொண்டு தேர்தல் நடத்த முடியாது.. மமதா வார்னிங்!

இந்த நிலையில் VDP Asspciates என்ற தேர்தல் ஆய்வு நிறுவனம் ஒன்று மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்குமானால் மோடியின் அமைச்சரவையில் தற்போதைய பாஜக தலைவரும் மோடியின் நெருங்கிய நண்பருமான அமித்ஷா உள்துறை அமைச்சராக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. அதோடு நிதியமைச்சர் பதவிக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் விமல் ஜலான் அல்லது தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் விர்மானி ஆகியோரில் ஒருவர் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் டெல்லி மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு யோசித்து வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Delhi CM Arvind Kjriwal has warned the people not to haste in electing BJP to the power again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X