டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆர்யன்கான் போதை வழக்கு.. புனேவில் பிடிபட்டார் சர்ச்சைக்குரிய "கிரண் கோஷாவி".. தீவிர விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: ஆர்யன்கான் போதை வழக்கில் முக்கிய சாட்சியமாக அறிவிக்கப்பட்டு, போதை பொருள் தடுப்பு பிரிவால் தேடப்பட்டு வந்த கிரண் கோஷாவி புனேவில் இன்று பிடிபட்டார். இவரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் மும்பைக்கு அழைத்து வர உள்ளனர்.

தனியார் துப்பறிவாளர் என்று அறியப்படும் கிரண் கோஷாவி இந்த வழக்கில் மிக முக்கியமான சாட்சியம் ஆவார். ஆர்யன்கான் கைதுக்கும், அந்த சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட ரெய்டுக்கும் இவர் முக்கிய பின்புலமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆர்யன் கானுடன் இவர் எடுத்த செல்பி வைரலான நிலையில்தான், கிரண் கோஷாவி யார் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட அன்று இரவு கிரண் கோஷாவி மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று விசாரணையில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம் ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்

என்ன நடந்தது

என்ன நடந்தது

சில நாட்களுக்கு முன் முன் கிரண் கோஷாவியின் பாதுகாலவர் என்று சொல்லப்படும் பிராபகர் செயில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ஆர்யன் கானை விடுவிக்க லஞ்ச பேரம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஷாருக்கான் தரப்பிடம் கிரண் கோஷாவி 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும். இதில் 18 கோடி பெற கிரண் கோஷாவி பணிந்து வந்ததாகவும். அதில் 8 கோடி ரூபாயை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவிற்கு கொடுக்க கிரண் கோஷாவி ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

கிரண் கோஷா

கிரண் கோஷா

இதற்காக கிரண் கோஷாவி பல இடங்களில் டீலிங் பேசியதாகவும். சாம் டிசோசா என்ற நபரின் போனில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து பேசியதாகவும் கிரண் கோஷாவியின் பாதுகாவலர் பிரபாகர் செயில் குறிப்பிட்டு இருந்தார். முக்கியமாக கிரண் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா டாட்லானியுடன் காரில் டீலிங் பேசியதாகவும் இவர் குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

இந்த சம்பவம் சர்ச்சையானதும் கிரண் கோஷாவி தலைமறைமானவர். மூன்று நாட்களுக்கு முன்பு இவர் லக்னோவில் சரண் அடைய போவதாக குறிப்பிட்டு இருந்தார். தனது உயிருக்கு ஆபத்து என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில்தான் கிரண் கோஷாவி புனேவில் பிடிபட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. புனேவில் பிடிபட்ட இவரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் மும்பைக்கு அழைத்து வர உள்ளனர். இந்த வழக்கில் இவர் முக்கிய சாட்சியமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைது

கைது

2018ல் பண மோசடியில் ஈடுபட்டதாக கிரண் கோஷாவி மீது ஏற்கனவே வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடத்தியதாக நடிகர் ஷாருக்கனின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட சிலர் அக்டோபர் 3ம் தேதி முன் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கானின் பெயில் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவர் பிடிப்பட்டது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

English summary
Aryan Khan drug case: NCP detains controversial 'witness' Kiran Gosavi in Pune on the day of actor's son's bail hearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X