டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Crude oil prices raises

    டெல்லி: ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

    சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு, உற்பத்தி ஆலைகள் உள்ளன. இது உலகின் மிகப் பெரிய ஆலைகளாகும். உலகத்துக்கு தேவையான கச்சா எண்ணெயில் 10 சதவீதம் இங்கிருந்துதான் பெறப்படுகின்றன.

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆரம்கோ, குரைஸ் ஆகிய எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கச்சா எண்ணெய் எரிந்து நாசமானது.

    சவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடுசவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு

    5.7 மில்லியன் பேரல்கள்

    5.7 மில்லியன் பேரல்கள்

    இதையடுத்து அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அவ்வாறெனில் நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியாகும் நிலையில் அதையும் அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது.

    10 சதவீதம் அதிகம்

    10 சதவீதம் அதிகம்

    இதனால் கச்சா எண்ணெயின் விலை கிடு கிடு என உயர்ந்துவிட்டது. திங்கள்கிழமை கச்சா எண்ணெய்யின் விலை பாரலுக்கு 67 டாலராக இருந்தது. இது 10 சதவீதம் அதிகமாகும்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்த விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    டீசல் விலை

    டீசல் விலை

    மேலும் பெட்ரோல், டீசல் விலையின் உயர்வு லிட்டருக்கு ரூ 5 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கெனவே பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    மந்தநிலை

    மந்தநிலை

    இந்த மந்த நிலையால் ஆட்டோமொபைல் துறையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையுயர்வு ஆட்டோமொபைல் துறைக்கு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்கின்றனர்.

    English summary
    As Crude oil price raises Petrol and Diesel prices may be high upto Rs 5 per litre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X