டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல் தோற்று விட்டார்.. அதனால்தான் பிரியங்கா வருகை.. ஏபிபி சர்வேயில் பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரியங்கா காந்தி அரசியலுக்கு வர காரணம், ராகுல் காந்தியின் தோல்விதான் என்று 50 சதவீதம் பேர் கருதுகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரியின், பிரியங்கா காந்தி, அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். பிப்ரவரி 11ம் தேதி உத்தர பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி வருகையால் அரசியலில் என்ன மாதிரியான பாதிப்புகள் தாக்கங்கள் ஏற்படப் போகிறது என்பது குறித்து ஏபிபி நியூஸ் (ABP) - சிவோட்டர் சர்வே நடத்தியது.

பிரியங்கா புயல் பாஜகவை காலி செய்யப் போகிறது.. கருத்துக் கணிப்பில் பரபரப்பு முடிவுகள் பிரியங்கா புயல் பாஜகவை காலி செய்யப் போகிறது.. கருத்துக் கணிப்பில் பரபரப்பு முடிவுகள்

ராகுல் காந்தி தோல்வி

ராகுல் காந்தி தோல்வி

இந்த சர்வேயில், 50% பேர், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி, தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு தலைமை கொண்டு வந்துள்ளதாகவும், கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

அரசியலுக்கு அவசியம்

அரசியலுக்கு அவசியம்

அதேநேரம், 46 சதவீதம் பேர் இவ்வாறு நினைக்கவில்லை. பிரியங்கா காந்தி காங்கிரசுக்கு அவசியம் என்பதால் அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.

காங்கிரஸ் திட்டம்

காங்கிரஸ் திட்டம்

பிரியங்கா காந்திக்கு மேலும் பல பொறுப்புகளை, வழங்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும்போது பிரியங்கா காந்திக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் என தெரிகிறது.

பேச்சாற்றல்

பேச்சாற்றல்

பிரியங்கா காந்தி பேச்சாற்றல் மிக்கவராக அறியப்படுபவர். மக்களை அதிலும் பெண்களை எளிதாக அவரது முக பரிட்சையம் சென்று சேரும் என காங்கிரஸ் கட்சி கணக்கு போட்டு பார்க்கிறது.

English summary
As per the survey, 50% feel that Rahul Gandhi failed as Congress President because of which Priyanka was pitchforked into a major role. 46% do not stand by the view.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X