டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை.. நாங்களும் போறோம்.. வைரலாகும் நோ மோடி நோ டிவிட்டர்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி டிவிட்டரில் இருந்து செல்வதால் பாஜக ஆதரவாளர்கள், மோடி ஆதரவாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இதற்காக நோ மோடி நோ டிவிட்டர் என்ற #NoModiNoTwitter டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Recommended Video

    #NoModiNoTwitter goes viral After Modi's Cryptic Announcement to Quit Social Media

    வரும் ஞாயிற்றுக்கிழமை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற அனைத்து வகையான சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறுவதற்கு யோசித்து வருவதாக பிரதமர் மோடி நேற்று ஒரு ட்வீட்டர் பதிவு வெளியிட்டிருந்தார். அவரின் இந்த டிவிட்டர் பதிவு பெரிய வைரலாகி உள்ளது.

    பிரதமர் மோடி டிவிட்டரில் மிகவும் பிரபலம். அவருக்கு 53.3 மில்லியன் பின் தொடர்பாளர்கள் டிவிட்டரில் மட்டுமே இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகவில்லை.

    டிரெண்ட்

    டிரெண்ட்

    இந்த நிலையில் பிரதமர் மோடி டிவிட்டரில் இருந்து செல்வதால் பாஜக ஆதரவாளர்கள், மோடி ஆதரவாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மோடி டிவிட்டரில் இல்லை என்றால் எங்களுக்கு வருத்தமாக இருக்கும். அவர் சென்றுவிட்டால் நாங்களும் கூட டிவிட்டரில் இருக்க மாட்டோம். ஆம் மோடி இல்லாத டிவிட்டர் எங்களுக்கு தேவை இல்லை என்று டிவிட் செய்து வருகிறார்கள். இதற்காக நோ மோடி நோ டிவிட்டர் என்ற #NoModiNoTwitter டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

    டேக்

    இந்த #NoModiNoTwitter டேக்கில் பலரும் மோடி குறித்தும், அவரின் சமூக வலைதள கணக்கு குறித்தும் பேசி வருகிறார்கள். இவர் பிரதமர் மோடி டிவிட்டரை விட்டு சென்றால் நானும் கண்டிப்பாக சமூக வலைத்தளங்களை விட்டு செல்வேன். அவர் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். மாறாக நான் இந்தியா உருவாக்கும் சமூக வலைத்தளங்களில் இணைவேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மோடி இல்லாத டிவிட்டர்

    மோடி இல்லாத சமூக வலைத்தளம் என்பது மிகவும் வருத்தமான விஷயம் எனக்கும். மோடி இல்லாத சமூக வலைத்தளம் என்பது, மகுடம் இல்லாத ராஜா போன்றது. காஷ்மீர் இல்லாத இந்தியா போன்றது. சந்தோசம் இல்லாத வாழ்க்கை போன்றது, என்று மிகவும் வருத்தமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

    டிவிட்டர் இல்லை

    மோடி இல்லை என்றால் டிவிட்டர் இல்லை. அது டிவிட்டர் நிறுவனர் ஜாக்கிற்கும் கூட தெரியும். மோடி மட்டும் டிவிட்டரை விட்டு சென்றால் மொத்த இந்தியாவும் டிவிட்டரை மொத்தமாக புறக்கணிக்கும். டிவிட்டர் நிறுவனத்திற்கு நாங்கள் பெரிய எச்சரிக்கை கொடுக்கிறோம். வெறுப்புகளை பரப்பும் மக்கள் மீது உடனே நடவடிக்கை எடுங்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

    வலைத்தளம்

    ஒருவேளை இந்தியா தனக்கு என்று ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்க வாய்ப்புள்ளது. இந்தியாவிற்கு என்று ஒரு தனி டிவிட்டரை உருவாக்க வாய்ப்புள்ளது. சீனாவில் இருக்கும் வீபோ போல தனி தளத்தை உருவாக்க வாய்ப்புள்ளது. இது மட்டும் உண்மையாக இருந்தால் சிறப்பாக இருக்கும். இப்படி ஒரு சமூக வலைத்தளத்தை கொண்டு வர இதுதான் சரியான நேரம், என்று இவர் குறிப்ப்பிட்டுள்ளார்.

    லாஸ்

    பிரதமர் மோடி சமூக வலைத்தங்களை விட்டு சென்றால் உலகம் முழுக்க இருக்கும் வெளிநாட்டு சமூக வலைதள நிறுவனங்கள் பல கொடிகளை இழக்கும். பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு நாமும் உதவா வேண்டும். அவருக்கு உறுதுணையாக நாமும் சமூக வளைதள கணக்குகளை துறக்க வேண்டும், ஜெய் ஹிந்த் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். இவரை போல பலரும் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக டிவிட் செய்து வருகிறார்கள்.

    English summary
    As PM Modi thinking about leaving Social Media, #NoModiNoTwitter goes viral in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X