டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று காஷ்மீர்.. நாளை வடகிழக்கு மாநிலங்கள்... எச்சரிக்கும் ஓவைசி

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு ரத்து செய்யப்பட்டதைப் போல நாளை வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உரிமைகளும் ரத்தாகலாம் என மஜ்லிஸ் கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஓவைசி கூறியுள்ளதாவது:

Asaduddin Owaisi warns NE States

பாகிஸ்தானுக்கு நாங்கள் உதவுவதாக வதந்திகளை பரப்புகின்றனர். தற்போதைய மத்திய அரசு நாகாலாந்து தனிநாடு கோரும் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது.

இத்தனைக்கும் தங்களது ஆயுதங்களை நாகா பிரிவினைவாதிகள் இன்னமும் ஒப்படைக்கவும் இல்லை. நாகா தேசிய இனத்தின் மூத்த தலைவர் மறைந்த போது நாகாலாந்துக்கான தனிகொடி பயன்படுத்தப்பட்டது.

அப்போது இரு கொடிகள் இருந்ததை அரசு தரப்பில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதை நாங்கள் அறிவோம். யாரை நீங்கள் முட்டாளாக்கப் பாக்கிறீர்கள்?

இந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்! இந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்!

நான் ஒரு எம்.பி.யாக இருந்தபோதும் அருணாசலபிரதேசத்துக்கோ லட்சத்தீவுக்கோ பெர்மிட் இல்லாமல் செல்ல முடியாது. அஸ்ஸாமின் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் நாம் நிலம் வாங்க முடியாது.

இன்று காஷ்மீருக்கு நேர்ந்தது நாளை நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், அஸ்ஸாம் மற்றும் ஹிமாசல பிரதேச மக்களுக்கும் நேரும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு ஓவைசி தெரிவித்துள்ளார்.

English summary
AIMIM MP Asaduddin Owaisi has warned North Easte States will face like Kashmir Situtation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X