டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்பயா போட்டோவை கட்டியணைத்து அழுத ஆஷா தேவி.. நீதி மறுக்கப்படவில்லை என்று நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பிறகு, சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி, இன்று குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடைசிவரை நீதிமன்றத்தின் வாயிலை தட்டிப் பார்த்தும் குற்றவாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, இன்று காலை 5.30 மணிக்கு நான்கு பேரும் திகார் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர்.

இந்த நீண்ட சட்டப் போராட்டத்தில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியின் பங்கு மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு முறை சட்டம், குற்றவாளிகளுக்கு அவர்களுக்கான வாய்ப்பைத் திறந்துவிட்ட போதும், மனம் தளராமல் தொடர்ந்து சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு போராடி வந்தவர் ஆஷா தேவி. தூக்கு தண்டனை நிறைவேற்றிய பிறகு, அவர் ஓடிச் சென்று தனது மகள் நிர்பயாவின் புகைப்படத்தை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Asha Devi, mother of Nirbhaya says justice prevailed

பின்னர் தனது சகோதரி சுனிதா தேவியையும், தங்கள் தரப்புக்கு ஆஜரான வழக்கறிஞர் சீமா குஷ்வஹாவையும் கட்டிப்பிடித்து அழுதார்.

ஒரு திருட்டு புகார்.. நிர்பயா குற்றவாளிகளின் திட்டம்..அதிகாலை 2.30 மணிக்கு வழக்கு நடக்க என்ன காரணம்?ஒரு திருட்டு புகார்.. நிர்பயா குற்றவாளிகளின் திட்டம்..அதிகாலை 2.30 மணிக்கு வழக்கு நடக்க என்ன காரணம்?

பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், கூறியதாவது: நிர்பயாவிற்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இந்த நாள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். எனது மகள் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் தேசத்தில் உள்ள அனைத்து மகளுகளுக்காகவும் எனது போராட்டம் தொடரும்.

இந்த போராட்டம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். நிர்மலாவுக்கு நீதி தாமதிக்கபட்டிருக்கலாம், ஆனால் மறுக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய நீதித்துறைக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆஷா தேவி தெரிவித்தார்.

English summary
Asha Devi, mother of 2012 Delhi gang rape victim shows victory sign & hugs her sister Sunita Devi and lawyer Seema Kushwaha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X