டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்பயா குற்றவாளிகளை மன்னிக்க முடியாது.. எனக்கு ஆலோசனை சொல்ல வழக்கறிஞர் இந்திரா யார்?.. ஆஷா தேவி

Google Oneindia Tamil News

Recommended Video

    Nirbhaya case | Convicts Will Now Hang On Feb 1

    டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை மன்னிக்கவே முடியாது என அந்த பெண்ணின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

    நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் குற்றவாளிகள் தங்களை மன்னிக்க கருணை மனுக்களை கொடுத்து வருகின்றனர்.

    அதை நீதிமன்றமும் உள்துறை அமைச்சகமும் ரத்து செய்த வண்ணம் உள்ளன.

    நல்ல வேளை நரேந்திர மோடி ராகுல் காந்தி இல்லை.. ராமச்சந்திர குஹா பரபரப்பு பேச்சுநல்ல வேளை நரேந்திர மோடி ராகுல் காந்தி இல்லை.. ராமச்சந்திர குஹா பரபரப்பு பேச்சு

    வழக்கறிஞர் கோரிக்கை

    இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகளை சோனியா காந்தி மன்னித்தது போல் நிர்பயா குற்றவாளிகளை அவரது தாய் ஆஷா தேவி மன்னிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கோரிக்கை விடுத்தார்.

    நாடே விரும்புகிறது

    நாடே விரும்புகிறது

    இதுகுறித்து நிர்பயாவின் தாய் ஆஷாதேவி கூறுகையில் எனக்கு ஆலோசனை அளிக்க இந்திரா ஜெய்சிங் யார்? குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என நாடே விரும்புகிறது.

    பாலியல் குற்றவாளிகள்

    பாலியல் குற்றவாளிகள்

    இந்திரா போன்றவர்களால்தான் பாலியல் குற்றவாளிகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இது போன்ற ஆலோசனையை எனக்கு கொடுக்க இந்திராவுக்கு தைரியம் எப்படி வந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

    குற்றவாளிகள்

    குற்றவாளிகள்

    நான் அவரை உச்சநீதிமன்றத்தில் பல முறை சந்தித்துள்ளேன். ஆனால் அவர் எனது நலன் குறித்து ஒருமுறையும் கேட்டதே இல்லை. ஆனால் இன்று குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுகிறார்.

    ஒரு போதும் நிறுத்தப்படாது

    ஒரு போதும் நிறுத்தப்படாது

    இவர் போன்ற ஆட்கள் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். எனவே பாலியல் பலாத்காரங்கள் ஒரு போதும் தடுத்து நிறுத்தப்படாது என்றார் ஆஷா தேவி.

    English summary
    Asha Devi says no forgive for Nibhaya convicts. whole country wants them to be executed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X