டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் அப்படி சொல்கிறார்.. உண்மையில் நடப்பதை வீடியோவில் பாருங்கள்.. ராகுல் காந்தி காட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் அஸ்ஸாம் உட்பட எங்குமே சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பு முகாம்கள் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் அது போன்ற ஒரு முகாம் கட்டப்பட்டு வருவது தொடர்பான தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"ஆர்எஸ்எஸின் பிரதமர் பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார்" என்று ராகுல்காந்தி அதில் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு பிறகு, நாடு முழுக்க தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூரிய கிரகணம்.. பகுத்தறிவு வியாதி.. முழு இந்து விரோதி.. தி.க மீது ஆவேசமாக பாயும் எச். ராஜா சூரிய கிரகணம்.. பகுத்தறிவு வியாதி.. முழு இந்து விரோதி.. தி.க மீது ஆவேசமாக பாயும் எச். ராஜா

ஆவணங்கள்

ஆவணங்கள்

மக்கள் தொகை பதிவேடு திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான், நாங்கள் என்று நிரூபிப்பதற்கு பழமையான ஆவணங்களை காண்பிக்க வேண்டி இருக்கும். ஒருவேளை அவ்வாறு காட்டாவிட்டால் தடுப்பு முகாம்களில் அவர்கள் அடைத்து வைக்கப் படுவார்கள் என்ற அச்சம் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அசாம்

அசாம்

அசாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் காரணமாக, பல லட்சம் மக்கள் தங்கள் குடியுரிமை ஆதாரத்தைக் காட்ட முடியாமல் தவித்து வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இவ்வாறு சட்டவிரோதமாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு தங்க வைப்பதற்கு தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

பிரதமர் பேச்சு

பிரதமர் பேச்சு

ஆனால் இதை பிரதமர் நரேந்திர மோடி, மறுத்தார். அசாம் உட்பட நாட்டின் எந்த ஒரு மூலையிலும் தடுப்பு முகாம்கள் கட்டப் படவில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பிபிசி என்ற சர்வதேச ஊடகம் அசாம் மாநிலம் மாட்டியா என்ற பகுதியில் தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருவதை வீடியோ ஆதாரமாக வெளியிட்டுள்ளது. சில மக்களிடமும் அந்த செய்தி நிறுவனம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், தாங்கள் இந்தியர்கள்தான் என்ற போதிலும் ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டுள்ளதாக பலர் கவலையோடு கூறுவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

வேறு ஊடகங்களும்

இந்தியா டுடே ஊடகமும் இந்த தடுப்பு முகாம்களை வீடியோவாக எடுத்து உள்ளது. அந்த தகவலின் படி 2018 ஆம் ஆண்டு இந்த தடுப்பு முகாமை கட்டுவதற்கு 46.41 கோடி ரூபாய், உள்துறை அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் சுமார் 3000 சட்டவிரோத குடியேறிகள் என்று கருதப்படுபவர்கள் ஒரே நேரத்தில் அடைத்து வைக்கப்படும் முடியும் என்றும், 28,800 சதுர அடி பரப்பளவில் தலைநகர் குவஹாத்திக்கு சுமார் 129 கிலோ மீட்டர் தொலைவில், இந்த தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. இந்த நிலையில் பிபிசி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸின் பிரதமர், பாரத மாதாவின் பொய் சொல்லுகிறார் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

English summary
Rahul Gandhi says Narendra Modi is saying lie, over Assam detention camps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X