• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள கட்சி பாஜக.. திமுக, அதிமுகவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: ரூ 4,847 கோடி சொத்து மதிப்புடன் நாட்டிலேயே பணக்கார கட்சியாக பாஜக உள்ளதாக ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, அவற்றின் சொத்து உள்ளிட்ட தகவல்களை வெளியிடும்.

 கூட்டணியுடன் வரும் திராவிட கட்சிகள்! தனித்து களமிறக்கும் 5 முக்கிய கட்சிகள்-பரபரக்கும் தேர்தல் களம் கூட்டணியுடன் வரும் திராவிட கட்சிகள்! தனித்து களமிறக்கும் 5 முக்கிய கட்சிகள்-பரபரக்கும் தேர்தல் களம்

அதன்படி இந்த ஏடிஆர் அமைப்பு 2019-20ஆம் நிதியாண்டிற்கான தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

 பாஜக முதலிடம்

பாஜக முதலிடம்

நாட்டில் மொத்தம் இருக்கும் 7 தேசிய கட்சிகள் மற்றும் 44 பிராந்திய கட்சிகளின் சொத்து விவரம், நிதி உள்ளிட்ட தகவல்களை இந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இப்போது வெளியிட்டுள்ளது. தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பாஜக ரூ. 4847.78 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. இது அனைத்து தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 69.37%ஆகும்.

 காங்கிரஸ் எங்கே

காங்கிரஸ் எங்கே


அதைத் தொடர்ந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ரூ. 698.33 கோடி, அதாவது 9.99 சதவீதத்துடன் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பல முறை ஆண்ட காங்கிரஸ் இந்தப் பட்டியலில் 3ஆவது இடத்தை தான் பிடித்துள்ளது. அக்கட்சிக்கு ரூ 588.16 கோடி சொத்துகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 7 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பைச் சேர்ந்தால் அது ரூ 6,988.57 கோடியாக உள்ளது.

 பிராந்திய கட்சிகள்

பிராந்திய கட்சிகள்

அதேபோல பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்தும் தனி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 44 பிராந்திய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,129.38 கோடியாக உள்ளது. குறிப்பாக இதில் டாப் 10 இடங்களில் உள்ள பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ 2028.715 கோடியாக உள்ளது. இது ஒட்டுமொத்த பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பில் 95.27%ஆகும்.

 அதிமுக 3ஆம் இடம்

அதிமுக 3ஆம் இடம்

பிராந்தியக் கட்சிகளில் உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி அதிகபட்சமாக ரூ.563.47 கோடியுடன் (26.46 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது. அதேபோல சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ரூ.301.47 கோடியுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் அதிமுக ரூ.267.61 கோடியுடன் 3ஆம் இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 வைப்பு நிதி

வைப்பு நிதி

இந்த சொத்துகளில் எஃப்டிஆர் எனப்படும் நிலையான வைப்புத்தொகை மூலமே அரசியல் கட்சிகளுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. அரசியல் கட்சிகளின் நிதியில் மொத்தம் ரூ.1,639.51 கோடி இப்படி வைப்புத்தொகையாக உள்ளது. அதில் பாஜகவுக்கு ரூ.3,253.00 கோடியும், பகுஜன் சமாஜுக்கு ரூ.618.86 கோடியும், காங்கிரஸ் ரூ.240.90 வைப்பு தொகையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியக் கட்சிகளில், சமாஜ்வாடி ரூ. 434.219 கோடி, டிஆர்எஸ் ரூ. 256.01 கோடி, அதிமுக ரூ. 246.90 கோடி, திமுக ரூ. 162.425 கோடி, சிவசேனா ரூ. 148.46 கோடி, பிஜு ஜனதா தளம் ரூ. 118.425 கோடி ஆகியவை வைப்பு நிதி மூலம் தங்கள் சொத்துகளைப் பெற்றுள்ளன.

 திமுகவுக்கு இருக்கும் கடன்

திமுகவுக்கு இருக்கும் கடன்

2019-20 நிதியாண்டில் ஏழு தேசிய மற்றும் 44 பிராந்தியக் கட்சிகள் ரூ.134.93 கோடி கடன் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதில் தேசிய கட்சிகளில் காங்கிரஸ் ரூ 49 கோடி திரிணாமுல் காங்கிரஸ் ரூ 11 கோடி, பாஜகவுக்கு ரூ 8 கோடி கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல பிராந்திய கட்சிகளில் தெலுங்கு தேசம் ரூ 30 கோடி மற்றும் திமுக ரூ 8 கோடி தடன் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன.

English summary
BJP declared assets worth Rs 4,847.78 crore, the highest among all political parties. Regional parties assets worth: DMk and ADMK parties assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion