டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்.. தடுத்த அத்வானி: யஷ்வந்த் சிங் ‘ஷாக்’ தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Yashwant Sinha: மோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்- வீடியோ

    டெல்லி: 2002-ஆம் ஆண்டு குஜராத் முதல்வர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை நீக்க முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் முடிவு செய்ததாகவும் அதை அத்வானி தடுத்து நிறுத்தியதாகவும் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வெள்ளிக்கிழமை பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு கலவரம் வெடித்தது.

    அதன் பிறகு அந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என வாஜ்பாய் முடிவு செய்திருந்தார். அதே ஆண்டில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    நான் யாரையும் காதலிக்கவில்லை.. ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.. ஆசிரியர் பகவான் விளக்கம்! நான் யாரையும் காதலிக்கவில்லை.. ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.. ஆசிரியர் பகவான் விளக்கம்!

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    ஒருவேளை மோடி ராஜினாமா செய்ய மறுத்தால் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார். கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

    செய்தியாளர்கள்

    செய்தியாளர்கள்

    மோடி அரசு கலைக்கப்பட்டால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என அத்வானி வாஜ்பாயிடம் தெரிவித்தார். இதனால் வேறு வழியின்றி தனது முடிவை வாஜ்பாய் நிறுத்தி விட்டார் என்றார். ஐஎன்ஸ் விராட்டை உல்லாச பயணத்துக்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    பிரதமர் பதவிக்கு

    பிரதமர் பதவிக்கு

    அதற்கு யஷ்வந்த் சின்ஹா கூறுகையில் இதெல்லாம் தேவையில்லாத விவகாரங்கள். இதுகுறித்து முன்னாள் கடற்படை அதிகாரிகள் போதுமான விளக்கங்களை அளித்து விட்டனர். இது போன்ற பொய்களை கூறுவது பிரதமர் பதவிக்கு அழகல்ல.

    துரதிருஷ்டவசம்

    துரதிருஷ்டவசம்

    மரியாதையாக பேச வேண்டும் என பிரதமரிடம் இருந்து எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. பாகிஸ்தான் விவகாரங்களை இந்த தேர்தலில் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்றார் யஷ்வந்த் சின்ஹா.

    English summary
    Yashwant Sinha revealed that Vajpayee planned to sack Modi from Gujarat CM. But Advani had opposed it and he said that if Modi is dismissed, then i would resign from Home Minister post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X