டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட் பை சொல்ல ரெடியாகும் ஏடிஎம் மெஷின்கள்.. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    டிஜிட்டல் பணபரிவர்தனைக்கு மக்களை தயார்படுத்த திட்டம் !

    டெல்லி: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ஏடிஎம்களும் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலாக டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மக்கள் எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    பணம் எடுக்க வேண்டும் என்றால் அன்று வரிசையில் நின்று பாஸ்புக்கை காண்பித்து அதில் வரவு வைத்து பணம் பெற்று வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று தடுக்கிவிழுந்தால் எத்தனை எத்தனை ஏடிஎம் மையங்கள். ஒரு சிறிய அறையை ஏடிஎம் மையத்துக்காக வாடகைக்கு விட்டு சம்பாதித்தும் வருகின்றனர்.

     எச்சரிக்கை

    எச்சரிக்கை

    அந்த அளவுக்கு ஏடிஎம் மையங்கள் நமது அவசர தேவையை பூர்த்தி செய்ததுடன் கால விரயத்தையும் மிச்சப்படுத்தியது. இந்நிலையில் நாட்டில் உள்ள 2.38 லட்சம் ஏடிஎம் மையங்களில் 50 சதவீதம் மூடும் அபாயத்தில் உள்ளதாக லாபநோக்கமில்லாத வர்த்தக சங்கம் (ஏடிஎம் தொழிற்சாலையின் கூட்டமைப்பு) எச்சரிக்கை விடுத்துள்ளது.

     1. 5 லட்சம் செலவாகும்

    1. 5 லட்சம் செலவாகும்

    ஏடிஎம் தொழிற்சாலையின் கூட்டமைப்பு கூறுகையில், சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள ஆர்பிஐ ஒழுங்குமுறை விதிகளின்படி ஏற்கெனவே உள்ள ஏடிஎம்களை புதுப்பிக்கும் செலவு அதிகரிக்கக் கூடும். ஏடிஎம்களின் பாதுகாப்பை அமல்படுத்தவே ஒரு மாதத்துக்கு ஒரு ஏடிஎம் மையத்துக்கு குறைந்தது ரூ. 1.5 லட்சம் செலவாகும். அப்போ 2.38 லட்சம் ஏடிஎம்களுக்கு என்ன செலவாகும் என்பதை பாருங்கள்.

     பெரும் சிரமம்

    பெரும் சிரமம்

    நிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற்ற தன்மை, ஊரக மற்றும் நகர்ப்புற மக்கள்தொகை, அரசின் டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஏடிஎம் மையங்கள் மூடப்படுவதாக தெரிவித்தன. இந்த மையங்கள் மூடப்பட்டுவிட்டால் இனி மக்கள் வங்கிகளுக்கு சென்று ஒவ்வொன்றுக்கும் நிற்பது பெரும் சிரமத்தை கொடுக்கும்.

     அரசு வழங்கலாம்

    அரசு வழங்கலாம்

    நோட்டு அடிப்பதற்கே பெரும் தொகை செலவிடப்படுகிறது என ஏற்கெனவே ஆர்பிஐ கூறியுள்ளது. எனவே கரன்சி நோட்டுகளை அடிப்பதை நிறுத்திவிட்டு மக்களை டிஜிட்டல் மயமாக்க அரசு முற்படுகிறது. பூ விற்பவர் முதல் தெரு கடை அண்ணாச்சி வரை அனைவருக்கும் ஸ்வைப்பிங் மெஷின்களை அரசு வழங்கலாம்.

     நம்புதல்

    நம்புதல்

    அவ்வாறு வழங்கும் பட்சத்தில் அதற்கான தொகை ஏதும் பிடிக்காமல் இருந்தால் சிறு வியாபாரிகள் பயன்பெறுவர். ஏடிஎம் மையங்களை பயன்படுத்துவதை விட இந்த வகை மெஷின்கள் கை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

     பணமதிப்பிழப்பு

    பணமதிப்பிழப்பு

    நோட்டடிக்கும் செலவை இந்த மெஷின்கள் வாங்குவதற்கு பயன்படுத்தும் யோசனையும் அரசிடம் இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ இனி பிக்பாக்கெட், ஏடிஎம் கொள்ளையர்கள் பாடு திண்டாட்டம்தான் என்பது நிதர்சனம். இன்னொரு முறை பணமதிப்பிழப்பு சம்பவங்கள் எல்லாம் ஏற்படாது போலயே. ஆனால் எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும் என்ற வடிவேலு தத்துவத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செய்தால்தான் அது சொதப்பலாக முடியாமல் சிறப்பாக முடியும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    English summary
    Nearly 50 percent of Automated Teller Machines (ATMs) may be shut down by March 2019 due to unviability of operations, hitting hard both urban and rural population, and dealing a blow to the digitization policy, the Confederation of ATM Industry (CATMi) warned on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X