டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரவிந்த் ஜேகரிவால் மீதான தாக்குதல் முதல் முறையல்ல.. கன்னத்தில் அறைந்தவர் மிளகாய்ப் பொடியை வீசிய நபர்

Google Oneindia Tamil News

டெல்லி: அரவிந்த் கேஜரிவால் மீதான தாக்குதல் இது முதல் முறைல்ல. கடந்த ஆண்டு மிளகாய் பொடி தூவிய நபரே இந்த முறை அவரது கன்னத்தில் அறைந்தார் என்ற தகவல் தெரிகிறது.

டெல்லி வடக்கு தொகுதியில் பிரிஜேஷ் கோயலை ஆதரித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்றைய தினம் திறந்த ஜீப்பில் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோட்டி நகர் பகுதியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்தவர்களுடன் கைகுலுக்கி பேசி கொண்டிருந்தார்.

அப்போது சிவப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்த நபர் ஒருவர் வேகமாக திறந்த வெளி ஜீப்பில் ஏறினார்.

ரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. அடுத்தடுத்த அரசியல் திருப்பம்.. பின்னணி இதுதான்! ரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. அடுத்தடுத்த அரசியல் திருப்பம்.. பின்னணி இதுதான்!

பரபரப்பு

பரபரப்பு

யாரும் எதிர்பாராத நேரத்தில் கேஜரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் மோசமான வார்த்தைகளை கூறி அவரை திட்டினார்.

 போலீஸில் ஒப்படைப்பு

போலீஸில் ஒப்படைப்பு

உடனே அங்கிருந்த கேஜரிவால் ஆதரவாளர்கள் அவரை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.

 மிளகாய்ப் பொடி

மிளகாய்ப் பொடி

அவரது வயது 33 என்றும் அவர் கைலாஷ் பார்க்கில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் கடை வைத்துள்ளதாகவும் தெரிகிறது. கேஜரிவால் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேஜரிவால் மீது மிளகாய்ப் பொடி தூவினார்.

பாஜகவின் வேலை

அது போல் இங்க் அடித்ததும் அந்த நபர்தான். கடந்த பிப்ரவரி மாதம் கேஜரிவாலின் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி கூறுகையில் இது முழுக்க முழுக்க பாஜகவின் வேலை.

டெல்லி மக்கள்

இந்த தாக்குதலானது அரவிந்த் கேஜரிவாலின் மீதான தாக்குதல் அல்ல. ஒட்டுமொத்த டெல்லி மீதான தாக்குதல். மே மாதம் 12-ஆம் தேதி பாஜகவுக்கு டெல்லி மக்கள் உரிய பதிலை வழங்குவர் என தெரிவித்தனர்.

English summary
Delhi Chief Minister Arvind Kejriwal was slapped by a man during a roadshow in Moti Nagar in New Delhi constituency. This is the second time Kejriwal has been slapped in a public rally. Earlier, he has also been attacked with ink and chilli powder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X