டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு வரப்போகிறது.. அதைப்பற்றி மட்டும் பேசாதீங்க.. அமைச்சர்களுக்கு மோடி அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி கவுண்டவுன்.. START.. BJP, RSS முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு

    டெல்லி: அயோத்தி குறித்து தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

    அயோத்தி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை டெல்லியில் உள்ள தனது அமைச்சர்கள் குழுவுடன் கலந்துரையாடினார், அப்போது அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் நாட்டில் நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அயோத்தி ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை நவம்பர் 17 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறுவதற்கு முன்னர் வழங்க வாய்ப்புள்ளது.

    அய்யோ அம்மா.. கோயம்பேட்டில் வெங்காய விலை மேலும் ரூ.5 அதிகரிப்பு.. உரிக்காமலே வருது கண்ணீர்அய்யோ அம்மா.. கோயம்பேட்டில் வெங்காய விலை மேலும் ரூ.5 அதிகரிப்பு.. உரிக்காமலே வருது கண்ணீர்

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    முன்னதாக அக்டோபர் 27 ம் தேதி தனது "மான் கி பாத்" வானொலி நிகழ்ச்சியில் பிரதர் மோடி பேசுகையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ம் ஆண்டு அளித்த தீர்ப்பின் போது, அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை எவ்வாறு தடுத்தனர் என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். ஒன்றுபட்ட குரல் நாட்டை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் மோடி தனது பேச்சின் போது விவரித்தார்.

    பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    இந்நிலையில் தான் நேற்று அமைச்சர்களிடம் பிரதமர் மோடி பேசும் போது, அயோத்தி தீர்ப்பு விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நல்லுறவு மற்றும் நல்லிணக்க சூழ்நிலையைப் பேண வேண்டும் என்றும் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வெற்றி மற்றும் தோல்வி என்ற ரீதியில் தீர்ப்பைக் காணக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

    ஆத்திரமூட்டும் பேச்சு

    ஆத்திரமூட்டும் பேச்சு

    ராமர் கோயில் பிரச்சினையில் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஆளும் பாஜக தனது நிர்வாகிகள் மற்றும் செய்தித் தொடர்பாளர்களைக் கேட்டுக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு பிரதமரிடம் இருந்தும் இதே கருத்துக்கள் வந்துள்ளன. அமைதியை நிலைநாட்ட தங்கள் தொகுதிகளுக்கு செல்லுமாறு பாஜக தனது எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    தீர்ப்பு குறித்து

    தீர்ப்பு குறித்து

    முன்னதாக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தது. அண்மையில் நடந்த உயர்மட்ட தலைவர்கள், கூட்டத்தில், ராமர் கோயில் தீர்ப்பு சாதகமாக இருந்தால் கொண்டாடவோ அல்லது ஊர்வலங்களை நடத்தவோ கூடாது என்று கேட்டுக் கொண்டது.

    அமைதியை நிலைநாட்ட

    அமைதியை நிலைநாட்ட

    இதனிடையே மூத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் செவ்வாய்க்கிழமை முக்கிய முஸ்லீம் மதகுருக்கள் மற்றும் அறிஞர்களை சந்தித்து பேசி மத நல்லிணக்கத்தை பேணுவது குறித்து விவாதம் நடத்தினார்கள். இந்த கூட்டம் டெல்லியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இல்லத்தில் நடந்தது. அப்போது அனைவரும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

    English summary
    Prime Minister Narendra Modi discussed the Ayodhya matter with his council of ministers in Delhi on Wednesday and asked them to refrain from making unnecessary statements on Ayodhya
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X