டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி பிரச்சனை.. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திடீர் ஆலோசனை!

அயோத்தி விவகாரம் தொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் அயோத்தி விவகாரம் தொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறது.

அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்டால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Ayodhya: AIMPLB calls an emergency meeting on the issue

முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்படும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுதான் அயோத்தி பிரச்சனை குறித்து இனி பேச்சுவார்த்தை நடத்தும்.

சிவகங்கை தொகுதி காங். வேட்பாளர் யார்?.. கார்த்தி சிதம்பரமா? சுதர்சன நாச்சியப்பனா?.. இன்று அறிவிப்புசிவகங்கை தொகுதி காங். வேட்பாளர் யார்?.. கார்த்தி சிதம்பரமா? சுதர்சன நாச்சியப்பனா?.. இன்று அறிவிப்பு

இந்த பேச்சுவார்த்தை முடியும் வரை இந்த குழு என்ன பேசுகிறது என்பது குறித்த விஷயங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த நிலையில் அயோத்தி விவகாரம் தொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறது.

வாரியத்தின் 51 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். அதேபோல் மத்திய வக்ஃபு வாரியத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்ட ஆலோசனை செய்தனர். மத்தியஸ்த குழுவினரிடம் என்னென்ன விஷயங்களை முன்வைப்பது என்று இவர்கள் ஆலோசனை செய்தனர்.

மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. அதனால தற்போது இந்த அவசர ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Ayodhya: The All India Muslim Personal Law Board - AIMPLB calls an emergency meeting on the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X