டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவரா இந்த தீர்ப்பு சொன்னது.. ஆச்சர்யம்.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. 5 நீதிபதிகளின் ஒருமித்த குரல்

அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி இருப்பது மிக முக்கியமானதாக

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Verdict:அயோத்தி வழக்கில்தீர்ப்பு வழங்கப்போவது இந்த 5 நீதிபதிகள்தான்

    டெல்லி: அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி இருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் நீதிபதி அப்துல் நசீர் தீர்ப்பும் பலரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

    அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு மிகவும் சுவாரசியமாகவும், யாருமே எதிர்பார்க்காத வகையில் வந்து இருக்கிறது. எல்லோரும் இன்று 2:3 அல்லது 4:1 என்று தீர்ப்பு வரும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் யாருமே நினைக்காத வகையில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

    ரஞ்சன் கோகாய்

    ரஞ்சன் கோகாய்

    அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுதான் இந்த தீர்ப்பை வழங்கினார். ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். அதற்குமுன் அவர் இந்த முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இவர், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

    இன்னொரு நீதிபதி

    இன்னொரு நீதிபதி

    இந்த அமர்வில் உள்ள நீதிபதிகளில் முக்கியமானவர் நீதிபதி எஸ்ஏ போப்டே. அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார். இவரும் இந்து அமைப்பான ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளார்.

    முக்கியமான நீதிபதி

    முக்கியமான நீதிபதி

    மிகவும் வித்தியாசமான அதிரடி தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிதான் டி.ஒய் சந்திரசூட். எஸ்ஏ போப்டேவிற்கு பின் இவர்தான் 2022-2024 வரை தலைமை நீதிபதியாக இருப்பார். இந்த நிலையில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டும் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவளிக்கும் தீர்ப்பை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

    மூன்று பேர்

    மூன்று பேர்

    இப்படி நிகழ்கால உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, வருங்கால உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்கால உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்று இந்தியாவின் மூன்று முக்கிய நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

    ஆனால் ஆச்சர்யம்

    ஆனால் ஆச்சர்யம்

    ஆனால் இதில் நிஜ ஆச்சர்யம் என்னவென்றால் நீதிபதி அப்துல் நசீர் தீர்ப்புதான். பொதுவாக 3 அல்லது 5 நீதிபதி அமர்வுகளில் இவரின் தீர்ப்பு மட்டும் வித்தியாசமாக இருக்கும்.உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக் முறை குற்றம் என்று தீர்ப்பு வந்த அமர்வில் இவர் இருந்தார். இதில் 3:2 என்ற அடிப்படையில், முத்தலாக் முறை குற்றம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அப்போது முத்தலாக் முறையை குற்றம் இல்லை என்று நீதிபதி அப்துல் நசீர் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    இவரும் தீர்ப்பு

    இவரும் தீர்ப்பு

    எல்லோரும் இவர் வேறு தீர்ப்பு கொடுப்பார் என்று கருதிய நிலையில், இவரும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளார். இவரின் தீர்ப்பு பலரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இவர் போக நீதிபதி அசோக் பூஷனும் இதே தீர்ப்பை சொல்லி இருக்கிறார்.

    சூப்பர்

    சூப்பர்

    இந்தியாவின் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய வழக்கு ஒன்றில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தோடு தீர்ப்பு தருவது பலரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. தீர்ப்பு எப்படியானதாக இருந்தாலும், வாதங்கள் , சட்டங்கள்படி ஒரே தீர்ப்பு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இது மிக முக்கியமான நாளாக வரலாற்றில் குறிக்கப்படும்.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    English summary
    Ayodhya Verdict: All five judges including DY Chandrachud and Nazeer gave the same Verdict today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X