டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாபர் மசூதியை பாபரே கட்டவில்லை.. அயோத்தி வழக்கில் புதிய ஆதாரத்தை சமர்ப்பித்த இந்து அமைப்பு!

பாபர் மசூதியை பாபர் கட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பான ராம் ஜென்மபூமி புனருத்தார் சமிதி வாதிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya case: Babar mosque wasn't bulid by Babar

    டெல்லி: பாபர் மசூதியை பாபர் கட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பான ராம் ஜென்மபூமி புனருத்தார் சமிதி வாதிட்டுள்ளது.

    1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் இந்த வழக்கில் முக்கிய மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

    தினமும்

    தினமும்

    இந்த வழக்கில் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது வரிசையாக இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்து அமைப்பான ராம் ஜென்மபூமி புனருத்தார் சமிதி சார்பாக பி என் சர்மா நேற்று வாதம் செய்தார்.

    பாபர் மசூதி

    பாபர் மசூதி

    அவர் தனது வாதத்தில், பாபர் மசூதியை பாபர் கட்டவே இல்லை. அதை பாபர்தான் கட்டினார் என்பதற்கு வரலாற்றில் எங்குமே ஆதாரம் இல்லை. பாபர் மசூதி கட்டப்பட்ட நேரத்தில் பாபர் டெல்லியில் ஆட்சி நடத்திக் கொண்டு இருந்தார். அவர் அயோத்தி வரவே இல்லை. அவர் ஒருமுறை கூட அயோத்தி வந்தது இல்லை.

    மூன்று புத்தகம்

    மூன்று புத்தகம்

    இதற்காக நான் மூன்று புத்தகங்களை எடுத்துக்காட்டாக கூற முடியும். எய்ன்- ஐ - அக்பரி, ஹுமாயுன் நாமா, துசுக் - ஐ - ஜஹாங்கீர் ஆகிய மூன்று புத்தகங்களை நான் சமர்பித்துள்ளேன் . இதில் எங்குமே பாபர்தான் பாபர் மசூதியை கட்டினார் என்று கூறப்படவில்லை. பாபர் மசூதி குறித்து அதில் ஒரு வார்த்தை கூட இல்லை.

    மகள்

    மகள்

    இதில் ஹுமாயுன் நாமா புத்தகம் பாபரின் மகள் மூலம் எழுதப்பட்டது. துசுக் - ஐ - ஜஹாங்கீர் புத்தகம் பாபரின் பேரன் மூலம் எழுதப்பட்டது. இவர்கள் எழுதிய புத்தகத்தில் கூட பாபர் மசூதி குறித்து கூறப்படவில்லை. அங்கு பாபர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

    ராமர் கோவில்

    ராமர் கோவில்

    அதேபோல் ராமர் கோவிலை இடித்துவிட்டு அதை மசூதியாக மாற்றியது பாபர் என்பதற்கான ஆதாரமும் இல்லை. பாபரின் தளபதியாக கருதப்பட்ட மீர் பாகிதான் பாபர் மசூதியை கட்டினார் என்பதற்கான ஆதாரமும் இல்லை. அவுரங்கசிப் காலத்தில் அயோத்தியில் கோவில் ஒன்று இருந்துள்ளது. அது மட்டும் உறுதியாக கூற முடியும்.

    கோவில்

    கோவில்

    அந்த பகுதியில் உள்ள கோவிலை அவுரங்கசிப் இடித்து இருக்கலாம். அதன்பின் அந்த கோவிலை அவுரங்கசிப் மசூதியாக மாற்றி இருக்கலாம் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் பாபர் மசூதியை பாபர் கட்டியது கிடையாது என்று புதிய வாதத்தை இந்து அமைப்பான ராம் ஜென்மபூமி புனருத்தார் சமிதி எடுத்து வைத்துள்ளது.

    English summary
    Ayodhya case: Babar mosque wasn't bulid by Babar says Ram Janmabhumi Punaruddhar Samiti Advocate P.N. Mishra,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X