டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Ayodhya Case Hearing: அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவு.. தீர்ப்பு ஒத்திவைப்பு

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இதனால் உத்தர பிரதேசத்தில் அயோத்தி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 14 அமைப்புகள் சார்பாக இதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்தியஸ்தர் குழுவின் சமரசம் தோல்வியில் முடிந்தது. சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் இந்த வழக்கில் முக்கிய மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இன்று இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடக்கும். இதனால் அயோத்தியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நவம்பர் 17க்குள் இதில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newest First Oldest First
4:10 PM, 16 Oct

அயோத்தி தொடர்பான செய்திகள் வெளியிட மீடியாக்களுக்கு கட்டுப்பாடு. மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதித்தது செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம்.
4:04 PM, 16 Oct

அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு .
3:05 PM, 16 Oct

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதியுடனே இந்துமகா சபை ஆவணங்களை கிழித்தேன் - ராஜீவ் தவான். ராஜீவ் தவான் முன்வைத்த கருத்தை ஒப்புக் கொண்டார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
2:49 PM, 16 Oct

சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ராஜீவ் தவான் தமது இறுதி வாதங்களை முன்வைத்தார். இந்துக்கள் தரப்பில் அயோத்தி நிலம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன- ராஜீவ் தவான்.
2:48 PM, 16 Oct

சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ராஜீவ் தவான் தமது இறுதி வாதங்களை முன்வைத்தார். இந்துக்கள் தரப்பில் அயோத்தி நிலம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன- ராஜீவ் தவான்.
2:40 PM, 16 Oct

அயோத்தி வழக்கில் தமது வாதத்தை முன்வைக்க சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி மறுப்பு. அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வாதங்கள் மட்டுமே கேட்கப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
2:34 PM, 16 Oct

அயோத்தி வழக்கில் இருந்து விலக அனுமதி கோரி எந்த மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என வக்பு வாரிய வழக்கறிஞர் ஜாபர்யாம் ஜிலானி விளக்கம்
2:30 PM, 16 Oct

அயோத்தி நிலத்தை 1856-க்கு முன்னர் முஸ்லிம் தரப்பு பயன்படுத்தியதற்கு ஆதாரம் இல்லை என இந்து தரப்பு மூத்த வழக்கறிஞர் பிஎன் மிஸ்ரா வாதம்
2:28 PM, 16 Oct

நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சனைக்கு தீர்வு காண சன்னி வக்பு வாரியம் அனுமதி கேட்கக் கூடும் என தகவல்
2:25 PM, 16 Oct

உச்சநீதிமன்றத்தில் உணவு இடைவேளைக்குப் பின்னர் அயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியது
1:08 PM, 16 Oct

அயோத்தி வழக்கு: மதிய உணவு இடைவேளைக்காக உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் நீதிமன்ற அமர்வு ஆரம்பிக்கும். இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து தரப்பும் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும்.
12:42 PM, 16 Oct

அயோத்தி வழக்கு விசாரணையில் பெரும் பரபரப்பு. இந்து மகாசபா சமர்ப்பித்த புத்தகத்தை கிழித்தெறிந்த சன்னி வக்பு வாரிய வக்கீல். சன்னி வக்பு வாரிய வக்கீல் ராஜிவ் தவானுக்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை. வழக்கை முடித்துக்கொண்டு நீதிபதிகள் எழுந்து சென்றுவிடுவோம் என ரஞ்சன் கோகாய் எச்சரிக்கை.
12:08 PM, 16 Oct

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நிர்மோகி அகாரா வாதம் நிறைவு. ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது- சிஎஸ் வைத்தியநாதன் வாதம். உலகில் ராம ஜென்ம பூமி அயோத்தியில் மட்டுமே இருக்கிறது. முஸ்லீம்கள் தொழுகை செய்ய வேறு நிறைய இடங்கள் உள்ளன- வைத்தியநாதன் நிறைவு வாதம்.
11:20 AM, 16 Oct

அயோத்தி வழக்கில் சேர்க்கக் கோரிய இந்து மகா சபையின் கோரிக்கை தள்ளுபடி
10:49 AM, 16 Oct

அயோத்தி வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு
10:44 AM, 16 Oct

அயோத்தி வழக்கில் முஸ்லீம் மனுதாரர்களிடையே ஏற்பட்ட பிளவால் புதிய திருப்பம். அயோத்தியில் உள்ள 22 மசூதிகளை அரசே ஏற்று பராமரிக்க சன்னி வக்பு வாரியம் விருப்பம்.
10:43 AM, 16 Oct

அயோத்தி நில வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சன்னி வக்பு வாரியம் கோரியுள்ளதாக, மத்தியஸ்த குழு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
8:42 AM, 16 Oct

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி- பாஜக செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி பேட்டி. அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராகேஷ் திரிபாதி பேட்டி.
6:45 AM, 16 Oct

அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது
6:45 AM, 16 Oct

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு வழக்கை விசாரிக்கும்
6:45 AM, 16 Oct

அயோத்தி வழக்கின் அனைத்து வாதங்களும் இன்றோடு முடிகிறது

Ayodhya Case Final Hearing Live Updates: Five justice bench will assemble for hearing today
English summary
Ayodhya Case Final Hearing Live Updates: Five justice bench will assemble for hearing today in Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X