டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பிளான் சொதப்பினால் இன்னொரு பிளான் ரெடி.. அயோத்தி வழக்கு.. பாதுகாப்பிற்காக மத்திய அரசு அதிரடி!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரும் நாளில் பல்வேறு திட்டங்களுடன் பாதுகாப்பு போடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    12,000 போலீஸ் குவிப்பு... அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு

    டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரும் நாளில் பல்வேறு திட்டங்களுடன் பாதுகாப்பு போடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாதுகாப்பில் சிறிய ஓட்டை கூட இல்லாத வகையில் திட்டம் போடப்பட்டுள்ளது என்கிறார்கள்.

    1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    அயோத்தி வழக்கு.. ரயில்வே நிலையங்களுக்கு அதிரடி எச்சரிக்கை.. பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!அயோத்தி வழக்கு.. ரயில்வே நிலையங்களுக்கு அதிரடி எச்சரிக்கை.. பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

    பல்வேறு அடுக்கு

    பல்வேறு அடுக்கு

    இதில் பல்வேறு அடுக்குகளாக பாதுகாப்புகள் போடப்பட்டு இருக்கிறது. அதன்படி முதல் பாதுகாப்பு திட்டம் தோல்வி அடைந்தால் வேறு திட்டத்தை செயல்படுத்துவார்கள். இப்படி 3 திட்டங்களை போலீஸ் தரப்பு போட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

    என்ன தீர்ப்பு

    என்ன தீர்ப்பு

    எந்த விதமான தீர்ப்பு வந்தாலும், கலவரம் ஏற்படாமல் இருக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அயோத்தி வழக்கில் மனுதாரர் தரப்புடன் ஆலோசனை நடத்தவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அவர்கள் தங்கள் தரப்பு மக்களை அமைதி காக்க சொல்ல வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    ராணுவம்

    ராணுவம்

    தீர்ப்பு வரும் நாளில் இந்தியாவில் முக்கிய நகரங்களில் ராணுவம் களமிறக்கப்பட உள்ளது. ராணுவ வீரர்கள் மும்பை, டெல்லி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு செய்வார்கள். தென்னிந்தியாவை விட வடஇந்தியாவில் அதிக கலவரம் வர வாய்ப்புள்ளதால் அங்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இல்லை

    இல்லை

    ஆனால் தீர்ப்பு வரும் நாளில் 144 தடை உத்தரவு போடப்படாது என்று கூறுகிறார்கள். மக்கள் இடையே பதற்றம் ஏற்பட கூடாது. அதனால் இயல்பு நிலை இருக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்படாது. விடுமுறையும் அளிக்கப்படாது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Ayodhya Case: Home affairs has number of security plans ahead of Verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X