டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு.. பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.. மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் வார்னிங்!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால் மாநிலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி தீர்ப்பு.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்

    டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால் மாநிலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    போக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்போக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்

    தீர்ப்பு வருகிறது

    தீர்ப்பு வருகிறது

    இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் தற்போது அயோத்தி உட்பட உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது அயோத்தியில் பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடுதலாக 4 ஆயிரம் பேர் அங்கு பாதுகாப்பு செய்ய இருக்கிறார்கள்.

    மாநில பாதுகாப்பு

    மாநில பாதுகாப்பு

    அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது. பீகார், மஹாராஷ்டிராவில் அதிக அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் 4 பேருக்கு மேல் கூட்டமாக நின்று பேச கூடாது என்று கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சமூக வலைத்தளம்

    சமூக வலைத்தளம்

    இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு இருக்கிறத. அயோத்தி தொடர்பாக தவறாக எழுதும் நபர்கள், வன்முறையை தூண்டும் வகையில் எழுதும் நபர்கள் மீது வழக்கு பதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    சட்ட ஒழுங்கு

    சட்ட ஒழுங்கு

    இது மட்டுமின்றி தற்போது சட்ட ஒழுங்கை கண்காணியுங்கள் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. உளவுத்துறையை வைத்து மாநில பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். உளவுத்துறை அறிக்கையை கவனமாக கண்காணியுங்கள். கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவியுங்கள்.

    என்ன கடிதம்

    என்ன கடிதம்

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் உங்கள் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்க வேண்டும். அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அசம்பாவிதங்கள் நடக்க கூடாது, என்று அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

    English summary
    Ayodhya Case: Central Home affairs issues advisory to State governments to remain alert ahead of Verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X