டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கு: வக்கீல் ராஜீவ் தவானுக்கு மிரட்டல்- சென்னை பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya case : அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை தொடங்கியது- வீடியோ

    டெல்லி: அயோத்தி வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நடைபெற்று வருகிறது. அயோத்தி வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

    Ayodhya Case: SC issues Contempt Notice To Chennai Professor

    இந்த வழக்கில் சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று ராஜீவ் தவான் சார்பாக மற்றொரு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவதூறு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

    அதில் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகம், ராஜீவ் தவானுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். சன்னி வக்ஃபு வாரியத்துக்காக அவர் ஆஜராகக் கூடாது எனவும் மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    ஒரு மயில் இருந்தால் போதுமா? ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே?.. இஸ்லாமிய அமைப்பு அதிரடி வாதம்!ஒரு மயில் இருந்தால் போதுமா? ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே?.. இஸ்லாமிய அமைப்பு அதிரடி வாதம்!

    மேலும் பேராசிரியர் சண்முகம் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்கள், கடிதங்கள் ஆகியவையும் இம்மனுவில் இணைக்கப்பட்டிருந்தது. இன்று இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பேராசிரியர் சண்முகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    English summary
    The Constitution bench of Supreme court today issues contempt notice to Chennai Professor Shanmugam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X