டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு மயில் இருந்தால் போதுமா? ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே?.. இஸ்லாமிய அமைப்பு அதிரடி வாதம்!

அயோத்தியில் இந்து கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இஸ்லாமிய அமைப்பு அயோத்தி வழக்கில் வாதம் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya case: Babar mosque wasn't bulid by Babar

    டெல்லி: அயோத்தியில் இந்து கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இஸ்லாமிய அமைப்பு அயோத்தி வழக்கில் வாதம் செய்துள்ளது.

    அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

    1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. இதில் சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றதால் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

    காலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்?காலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்?

    முக்கியம்

    முக்கியம்

    இந்த வழக்கில் சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இவரின் வாதம் வழக்கு தொடங்கியதில் இருந்தே அதிக கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தனது வாதத்தில் ராஜீவ் தவான் முக்கியமான விஷயங்களை வாதங்களாக வைத்தார்.

    எப்படி

    எப்படி

    அதில், இந்த நீதிமன்றத்தில் இந்துக்களின் நம்பிக்கை குறித்து வாதங்களை வைத்து வருகிறார்கள். ராமர் பிறந்த இடம், ராமர் கோவில் இருந்த இடம் என்று இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வாதங்களை வைத்து வருகிறார்கள். அதற்கான ஆதாரமே இல்லை. ஆனால் அவர்கள் 1934ல் இருந்து தங்கள் கண் முன் இருந்த ஆதாரங்களை மறந்துவிட்டார்கள். பாபர் மசூதி இருந்த ஆதாரத்தையே மறந்துவிட்டனர்.

    முடிவு

    முடிவு

    இதில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறதோ அதுதான் இந்தியாவின் முகமாக இருக்கும். இந்தியா மதசார்பற்ற நாடு. அதன் முகத்தை காக்க வேண்டும் என்றால், நீதிமன்றம் சரியான முடிவை எடுக்க வேண்டும். தீர்ப்பு வழங்கும் முன் உச்ச நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    அடிப்படை

    அடிப்படை

    இந்த வழக்கு எதன் அடிப்படையில் நடக்கிறது. ராமர் அங்குதான் பிறந்தார் என்பதை எப்படி இவர்கள் வரலாற்று ரீதியாக நிரூபிப்பார்கள். எப்படி அவர்களால் உறுதியான சாட்சியங்களை வழங்க முடியும். மசூதியில் ஒரே ஒரு மயில் சிலையும், தாமரை சிலையும் கிடைத்தால் அது இந்து கோவிலா?

    என்ன சிலை

    என்ன சிலை

    1934ல் மசூதியை சிலர் உடைத்தனர். 1947ல் அதன் உள்ளே புகுந்து சிலைகளை வைத்தனர்.1992ல் மொத்தமாக மசூதியை இடித்தனர். இதற்கு எல்லாமே வலுவாக ஆதாரம் இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் ஏன் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவே இல்லை. இதை ஏன் உச்ச நீதிமன்றம் நினைத்து கூட பார்க்கவில்லை.

    எதிர்காலம் எப்படி

    எதிர்காலம் எப்படி

    இது இந்தியாவின் எதிர்காலம் தொடர்பானது. நாம் அரசியலமைப்பு ரீதியாக இதை விசாரிக்க வேண்டும். இந்து அரசியலமைப்பு ரீதியாக விசாரிக்க கூடாது. இங்கு உள்ள சிலைகள் எல்லாம் மிக மிக பழையது அதற்கும் மசூதிக்கும் தொடர்பு இல்லை. இந்த மசூதி வெறும் இடத்தில் கட்டப்பட்டது.

    மசூதி எப்படி

    மசூதி எப்படி

    மசூதி கட்டப்பட்ட நேரத்தில் அந்த நிலத்தில் எதுவுமே இல்லை. அங்கு தரையில் எதுவுமே காணப்படவில்லை. இதற்கான ஆதரங்களை சமர்ப்பித்து இருக்கிறோம். இங்கு மசூதி கட்டப்பட்ட நேரத்தில் எந்த இந்து கோவிலும் இல்லை என்று ராஜீவ் தவான் வாதம் செய்துள்ளார்.

    English summary
    Ayodhya case: There is no proof for a Hindu Temple in Ayodhi says Muslim Body yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X