டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Section 144 Imposed In Ayodhya

    டெல்லி: முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி, சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அதன் இறுதி கட்ட விசாரணை இன்று மீண்டும் ஆரம்பித்து உள்ளது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி காலம் வரும் நவம்பர் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அவர் ஓய்வு பெறும் முன்பாக இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, அவ்வாறு தீர்ப்பு வெளியாகிவிட்டால் என்ன ஆகும் என்பது தொடர்பாக, சட்ட வல்லுநர்கள் கூறக்கூடிய தகவல்கள் ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.

    Ayodhya case will be hear again if Chief Justice Ranjan Gogoi retires

    அதாவது, ஒருவேளை ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, தீர்ப்பு வெளியாகா விட்டால், மறுபடியும், ஆரம்பத்திலிருந்து மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்பதுதான் இந்த தகவல்.

    கண்டிப்பாக, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதிகளும் இந்த அம்சத்தை யோசிக்காமல் இருக்க வாய்ப்பு கிடையாது, எனவே தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பாக கண்டிப்பாக தீர்ப்பு வெளியாகி விடும் என்பதே சட்ட வல்லுனர்கள் கணிப்பாக உள்ளது.

    Ayodhya case will be hear again if Chief Justice Ranjan Gogoi retires

    ஆகஸ்டு 6ம் தேதி, முதல் அயோத்தி வழக்கில், தினசரி அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க தொடங்கியது, 2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை வழக்கு அடைந்து விட்ட போதிலும், இப்போதுதான், முழு வேகம் காட்டப்பட்டு வருகிறது.

    அயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது? அரசின் திட்டம் என்ன?அயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது? அரசின் திட்டம் என்ன?

    முன்னதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லாலா, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய முத்தரப்புக்கு, பகிர்ந்தளிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

    முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2017ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே, வழக்கின் வேகம் அதிகரித்தது. அப்போது இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடியும் வரை இந்த வழக்கை விசாரிக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இதை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்ற நிலையில், செப்டம்பர் 27ம் தேதி அவர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன்படி 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் மீண்டும் ஒரு காலதாமதம் ஏற்பட்டது. ஏனெனில் அப்போது மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் இந்த சமரச குழு தாக்கல் செய்த அறிக்கையில் சமரச முயற்சி தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தான் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் வழக்கு விசாரணை மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகா விட்டால், மீண்டும் வழக்கு காலதாமதத்தை அடையும் என்பதால், பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    If the Supreme Court bench does not decide the case before Chief Justice Ranjan Gogoi retires on November 17, the matter would be back to square one.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X