டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு தவறானதுதான்.. ஆனால் எல்லாவற்றையும் கடந்து செல்லுங்கள்.. யஷ்வந்த் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு... அரசியல் தலைவர்கள் கருத்து

    டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறுகளும் குறைபாடுகளும் உள்ளன என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து 70 ஆண்டுகளாக பிரச்சினை இருந்துவந்தது. அது தொடர்பான வழக்கும் நீண்ட நாட்களாக நடந்து வந்தன.

    இந்த நிலையில் கடந்த வாரம் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த கோயிலும் இல்லை. அகழ்வாராய்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு ஒரு கட்டடம் இருந்தது.

    உச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    சர்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் வழங்கவில்லை. எனவே அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட மாற்று இடமாக அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்க மத்திய அரசு மற்றும் உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    பாஜக மூத்த தலைவர்

    பாஜக மூத்த தலைவர்

    இந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்ட ஆணையம் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்க மறுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவுசெய்துள்ளது. இதனிடையே மும்பையில் நடந்த ஒரு விழாவில் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கலந்து கொண்டார்.

    முஸ்லிம் சமூகம்

    முஸ்லிம் சமூகம்

    அவர் கூறுகையில் உச்சநீதிமன்றம் வழங்கியது தவறான தீர்ப்பு. அந்த தீர்ப்பில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. ஆனால் நான் முஸ்லிம் சமூகத்தினரை கேட்பதெல்லாம் ஒன்றுதான்.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    அரசு அளிக்கும் 5 ஏக்கர் நிலத்தையும் அயோத்தி தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தூக்கி போடுங்கள். எல்லாவற்றையும் கடந்து செல்லலாம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தாண்டி வேறு தீர்ப்பேதும் இல்லை என்றார்.

    English summary
    BJP Senior leader Yashwant Sinha says that Ayodhya judgement is faulty and Muslims community should accept the judgement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X