டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு.. 24 முறை மதசார்பின்மை வார்த்தையை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: அயோத்தி நிலப்பிரச்சினை வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் போது, இரு மதப் பிரிவினர் நடுவே எந்த ஒரு உரசலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக மிக கவனம் செலுத்தியுள்ளது.

    1045 பக்க தீர்ப்பில் 24 முறை மத சார்பின்மை என்ற வார்த்தையை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

    இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு பெரும் சமூகத்தினர் நடுவே, நீண்ட நெடுங்காலமாக சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த ஒரு பிரச்சினை என்பதால் உச்ச நீதிமன்றம் இதை மிகவும் பொறுப்புணர்வுடன் ஜாக்கிரதை உணர்வுடன் கையாண்டுள்ளது.

    எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!

    மத நம்பிக்கை

    மத நம்பிக்கை

    தீர்ப்பில் ஒரு வரி இப்படி சொல்கிறது. மத நம்பிக்கை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சம மதிப்பு வழங்க வேண்டும் என்பது அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உரிய கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது என்கிறது அந்த வரி.

    தவறான செயல்கள்

    தவறான செயல்கள்

    தார்மீக ரீதியான, தவறான செயல்களால் நமது வரலாறு நிரம்பியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இன்றும் கூட அது கருத்தியல் விவாதத்தைத் தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.

    அடிப்படை

    அடிப்படை

    காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் சரி சம உரிமை வழங்கப்பட்டு, அவர்களின் மத வழிபாட்டில் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை வழங்கப்பட்டு வந்துள்ளது. மதசார்பின்மை மற்றும் அனைத்து மதங்களுக்கும் சம பாவனை என்பது அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை அம்சம் என்கிறது என்று தீர்ப்பு.

    அரசியலமைப்பு

    அரசியலமைப்பு

    அரசியலமைப்பு எப்போதும் மதிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்வதையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். எல்லா மதங்களின் சமத்துவமும். மதச்சார்பின்மையும், இந்த நாட்டின் அடிப்படை. இவ்வாறு தீர்ப்பில் வரிகள் இடம் பெற்றுள்ளன.

    English summary
    Ayodhya verdict: The Constitution postulates the equality of all faiths. Tolerance and mutual co-existence nourish the secular commitment of our nation and its people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X