டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

70 ஆண்டுகால அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya verdict | அயோத்தி வழக்கு: காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை: நீதிபதிகள் அதிரடி

    டெல்லி: 70 ஆண்டுகால அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கவுள்ளனர். அதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சந்தித்து வருகிறார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தது.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    3 பிரிவினர்

    3 பிரிவினர்

    இந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

    சுப்ரீம் கோர்ட் அமைத்த நீதிபதிகள்

    சுப்ரீம் கோர்ட் அமைத்த நீதிபதிகள்

    இந்த வழக்கை விசாரிக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகிய 5 நீதிபதிகள் உள்ளனர்.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    இந்த 5 பேரும் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் 40 நாட்கள் நடைபெற்று வந்தது. அக்டோபர் 16-ஆம் தேதி விசாரணையை முடித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வெளியானது.

    அரை மணி நேரம்

    அரை மணி நேரம்

    தீர்ப்பின் நகலை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்தார். இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். 1045பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசிக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆனது.

    English summary
    Ayodhya verdict: All the 5 judges deliver the same judgement. As CJI Ranjan Gogoi reading the verdict. It takes 30 minutes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X