டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கு.. அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை அழைத்த அமித் ஷா.. முக்கிய ஆலோசனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

    டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு முன்னர்.. வழக்கு தொடுத்தவர்கள் யார்? யார்? இவர்களின் வாதம் என்ன?அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு முன்னர்.. வழக்கு தொடுத்தவர்கள் யார்? யார்? இவர்களின் வாதம் என்ன?

    20 நிமிடம்

    20 நிமிடம்

    இந்த நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடமாக ஆலோசனை நடந்து வருகிறது.

    பாதுகாப்பு நடவடிக்கை

    பாதுகாப்பு நடவடிக்கை

    நாடு முழுவதும் செய்யப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இவர்கள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. தீர்ப்பிற்கு பின் என்ன செய்ய வேண்டும். பிரச்சனைகள் வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும். அவசர காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

    உளவுத்துறை அதிகாரிகள்

    உளவுத்துறை அதிகாரிகள்

    இந்த ஆலோசனையில் உளவுத்துறை அதிகாரிகளும் இடம்பெற்று இருக்கிறார்கள். அதன்படி சமூக வலைத்தளங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கும் பொறுப்பு உளவுத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான மாற்றங்களையும் இவர்கள் கவனித்து வருகிறார்கள்.

    பாதுகாப்பு ஆலோசகர் தோவல்

    பாதுகாப்பு ஆலோசகர் தோவல்

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதில் கலந்து கொண்டுள்ளார். காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட போது நாடு முழுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னின்று கவனித்தவர் இவர்தான். தற்போது அயோத்தி வழக்கிலும் இவரின் பாதுகாப்பு பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது.

    English summary
    Home Minister Amit Shah calls a high-level security meeting with National Security Advisor (NSA) Ajit Doval and Intelligence Bureau at his residence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X