டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான்தான் ட்ரீட் தருவேன்.. சக நீதிபதிகளுக்கு டின்னர் கொடுக்கும் தலைமை நீதிபதி.. இதுதான் காரணம்!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசன அமர்வில் இருந்த சக நீதிபதிகளுக்கு இரவு விருந்து அளிக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Verdict:அயோத்தி வழக்கில்தீர்ப்பு வழங்கப்போவது இந்த 5 நீதிபதிகள்தான்

    டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசன அமர்வில் இருந்த சக நீதிபதிகளுக்கு இரவு விருந்து அளிக்கிறார்.

    அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

    அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும்: அமித்ஷாஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும்: அமித்ஷா

    இரவு உணவு

    இரவு உணவு

    இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசன அமர்வில் இருந்த சக நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோருக்கு இரவு உணவு வாங்கித் தர இருக்கிறார்.

    டெல்லி தாஜ்

    டெல்லி தாஜ்

    டெல்லி தாஜ் மான்சிங் ஹோட்டலில் தலைமை நீதிபதி இந்த ட்ரீட்டை கொடுக்கிறார். அயோத்தி வழக்கு காரணமாக கடந்த ஒன்றரை மாதமாக இந்த ஐந்து நீதிபதிகளும் கடுமையாக உழைத்தனர். தினமும் வழக்கை கவனமாக ஆராய்ந்து, பல்வேறு விவரங்களை சேகரித்தனர்.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    முக்கியமான வழக்கு

    முக்கியமான வழக்கு

    இந்தியாவில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், இதன் தீர்ப்பை எல்லோரும் எதிர்நோக்கினார்கள். இதனால் பாதுகாப்பு பிரச்சனையும் ஏற்படலாம். அதனால் இயல்பாகவே இந்த நீதிபதிகள் ஐவருக்கும் அதிக அழுத்தம் இருந்தது. ஆனால் தற்போது எந்த அசம்பாவிதமும் நடக்காமல் சுமுகமாக வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பதவி

    பதவி

    இதனால் இன்று தனது சக நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ட்ரீட் கொடுக்கிறார். அதோடு வரும் 17ம் தேதி தலைமை ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் முடிகிறது. அதற்காகவும் இந்த ட்ரீட் வழங்கப்படுகிறது. அவர்களுடன் பணி செய்ததை பாராட்டும் விதமாக இந்த விருந்தை ரஞ்சன் கோகாய் கொடுக்கிறார்.

    English summary
    Ayodhya Verdict: Chief Justice of India, Ranjan Gogoi will be giving a treat to brother judges today night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X