டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக தீர்ப்பு உள்ளது- அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக உள்ளது என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

    Ayodhya verdict is against our expectations, AIMPLB

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்கள் தரப்பில் ஒப்படைக்கவும் அங்கு கோயில் கட்டவும் அனுமதி அளித்தது. அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு தர வேண்டும் என தீர்ப்பளித்தது.

    1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    இத்தீர்ப்புக்கு சன்னி வக்பு வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேபோல் இவ்வழக்கில் ஒருதரப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் கருத்து தெரிவித்துள்ளது.

    அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தமது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.

    எங்கள் தரப்பில் வலுவான ஆதாரங்களை கொடுத்திருந்தோம். எங்களது சட்ட வல்லுநர்கள் குழு இத் தீர்ப்பை ஆராயும். பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் எங்கள் பொறுப்பை நாங்கள் முழுமையாக செய்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    English summary
    All India Muslim Personal Law Board tweets, The judgment is against our expectations. We presented solid evidences to prove our stance. Our legal committee will review the judgment. We have sincerely tried to fulfill our responsibility to restore the demolished #BabriMasjid".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X