டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்சரித்தும் கேட்கல.. அயோத்தி தீர்ப்பு பற்றி சோஷியல் மீடியாவில் விஷம கருத்து.. 37 பேர் மீது வழக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று அயோத்தி நிலப் பிரச்சினை வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, விஷம கருத்து தெரிவித்து வன்முறையை தூண்ட முயன்றதாக உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 12 முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலப் பிரச்சினை வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஆட்சேபனைக்குரிய பதிவுகள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட உத்தரபிரதேச காவல்துறை, சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

3,712 சமூக ஊடக போஸ்டிங்குகள் மீது புகார் வந்ததாகவும், அந்த ஆட்சேபனைக்குரிய போஸ்ட்களை நீக்குவதன் மூலமோ அல்லது அந்த கணக்கை முடக்குவதன் மூலமோ, நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இனி இங்குதான் முழு கவனம்.. அயோத்தி வெற்றி தந்த உத்வேகம்.. கேரளா, தமிழகம் பக்கம் திரும்பும் பாஜக!இனி இங்குதான் முழு கவனம்.. அயோத்தி வெற்றி தந்த உத்வேகம்.. கேரளா, தமிழகம் பக்கம் திரும்பும் பாஜக!

முதல் முறை

முதல் முறை

உ.பி. போலீஸ் டிஜிபி ஓ.பி. சிங் முன்னதாக, கூறுகையிில், மாநிலத்தில் முதன்முறையாக அவசரகால செயல்பாட்டு மையம் (ஈஓசி) அமைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் என்று தெரிவித்தார். அதன்படியே கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இத்தனை பேர் சிக்கியுள்ளனர்.

இணையதள சேவை

இணையதள சேவை

இதற்கிடையில், பிற மாநிலங்களிலும் சட்டவிரோத செயல்கள் நடக்காமல் தடுக்க சட்டப்பிரிவு 144 அமல்படுத்தப்பட்டது. போலீசார், ரோந்துப் பணிகளிலும் ஈடுபட்டனர். வட இந்தியாவின், பல மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது.

5 ஏக்கர் நிலம்

5 ஏக்கர் நிலம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியதுடன், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஐந்து நீதிபபதிகள் பெஞ்ச்

ஐந்து நீதிபபதிகள் பெஞ்ச்

அயோத்தி வழக்கு தொடர்பாக ஏகமனதாக தீர்ப்பளித்த இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

English summary
A total of 37 people have been booked and 12 FIRs have been registered in Uttar Pradesh in connection with the Supreme Court verdict on the Ayodhya case that was delivered on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X