டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தியில் அனைவரும் இணைந்து பிரமாண்ட கோவில் கட்டுவோம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு... அரசியல் தலைவர்கள் கருத்து

    டெல்லி: அயோத்தியில் அனைவரும் இணைந்து ராமர் கோவிலை கட்டுவோம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மோகன் பகவத் கூறியதாவது:

    பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நில உரிமை பிரச்சனைக்கு சரியான தீர்வு எட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    Ayodhya Verdict: RSS Chief Mohan Bhagwat appeals clam

    உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இத் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் கிடையாது; தோல்வியும் இல்லை. சமூகத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவரையும் நாம் வரவேற்கிறோம்.

    அயோத்தி வழக்கில் மறுசீராய்வு இல்லை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்.. சன்னி வக்ஃப் வாரியம் முடிவுஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு இல்லை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்.. சன்னி வக்ஃப் வாரியம் முடிவு

    மாச்சரியங்களை ஒதுக்கி வைத்து அனைவரும் இணைந்து அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டுவோம். அனைத்து தரப்பு மக்களும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

    அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

    English summary
    RSS Chief Mohan Bhagwat has appealed the people to maintain law and order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X