டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 விஷயங்கள்தான் முக்கியம்.. அயோத்தி வழக்கின் தீர்ப்பில் முக்கிய பங்கு வகித்த ஆதாரங்கள் இவைதான்!

அயோத்தி வழக்கில் இன்று வெளியாகி இருக்கும் தீர்ப்பிற்கு பின் 8 முக்கிய ஆதாரங்கள் மற்றும் வாதங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: அயோத்தி வழக்கில் இன்று வெளியாகி இருக்கும் தீர்ப்பிற்கு பின் 8 முக்கிய ஆதாரங்கள் மற்றும் வாதங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

    அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின் வரும் 8 விஷயங்கள்தான் வழக்கில் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.

     அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிக்கிறேன்.. முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிக்கிறேன்.. முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி

    முதல் விஷயம்

    முதல் விஷயம்

    இதில் ஷியா அமைப்பின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஷியா வக்பு வாரியத்தைப் பொறுத்தவரையில் சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் பாபரால் இந்த மசூதி கட்டப்படவில்லை. அவரது தளபதிகளில் ஒருவரான ஷியா பிரிவை சேர்ந்தவராலேயே இந்த மசூதி கட்டப்பட்டது என்கிற வாதத்தை முன்வைத்திருக்ந்தது. இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. அவர்களின் வாதம் நிரூபிக்கப்படவில்லை. இதனால் நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    இரண்டாவது விஷயம்

    இரண்டாவது விஷயம்

    அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரும் நிர்மோகி அகார மனுவில் உண்மை இருப்பதாகவும், ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்களும் இதை நிரூபிக்கவில்லை அவர்களுக்கு அங்கு வழிபாட்டு உரிமை இருந்ததாக வரலாற்று ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. அதனால் நிலத்திற்கு உரிமை கோரும் உரிமை நிர்மோகி அகார அமைப்பிற்கும் இல்லை. இப்படி இரண்டு முக்கிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    மூன்றாவது விஷயம்

    மூன்றாவது விஷயம்

    இஸ்லாமியர்கள் அந்த நிலத்தின் உட்பகுதியில் தொழுகை செய்தது வந்தது நிரூபணம் ஆகி உள்ளது..
    தடங்கல்கள் இருந்தாலும் இஸ்லாமியர்கள் உள்பக்கத்தில் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இது பல காலமாக நீடித்து வந்து இருக்கிறது. அவர்கள் மசூதியை விட்டு செல்லவில்லை என்று நிரூபணம் ஆகியுள்ளது.

    நான்காவது விஷயம்

    நான்காவது விஷயம்

    ஆனால் இன்னொரு பக்கம் இந்துக்கள், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உட்பகுதியில்தான் ராமர் பிறந்ததாக நம்புகிறார்கள். மேலும் அந்த இடத்தின் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். அங்கு இரண்டு வழிபாடும் நடந்துள்ளது. தனியாக இஸ்லாமிய வழிபாடு நடந்தது என்றும் கூற முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    ஐந்தாவது விஷயம்

    ஐந்தாவது விஷயம்

    1992ல் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கிறது. இது சட்ட விதிப்படி தவறு. விதியை மீறி இந்த செயலை செய்து இருக்கிறார்கள். இதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

    ஆறாவது விஷயம்

    ஆறாவது விஷயம்

    1949ல் விதியை மீறி மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மசூதிக்கு வெளியே கலவரம் ஏற்பட்ட போது உள்ளே சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது. இதையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

    ஏழாவது விஷயம்

    ஏழாவது விஷயம்

    அலகாபாத் நீதிமன்றம் அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு. ஷியா அமைப்பிற்கு நிலம் வழங்கியதை ஏற்க முடியாது. நிலத்தை சட்ட ரீதியாக மட்டுமே பிரித்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதுவும் இன்றைய தீர்ப்புக்கு முக்கிய காரணம் ஆகும்.

    எட்டாவது விஷயம்

    எட்டாவது விஷயம்

    இந்த வழக்கில் அகழ்வாராய்ச்சி முடிவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கு வாதத்தின் போதும் இந்து அமைப்புகள் அகழ்வாராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்து வாதங்களை வைத்தது. அதன்படி மசூதி இருந்த இடத்தில் இதற்கு முன் கோவில் இருந்தது என்று வாதங்கள் வைக்கப்பட்டது. இந்த முடிவுகளை எடுத்துக்காட்டிதான் இன்று தீர்ப்பின் பெரும்பகுதி வாசிக்கப்பட்டது.

    முடிவுகள்

    முடிவுகள்

    காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. ஏற்கனவே அங்கே ஒரு கட்டிடம் இருந்தது. பாபர் மசூதியின் கீழ் பகுதியில் இருக்கும் அந்த பழைய அமைப்பு இஸ்லாமிய முறைப்படி இல்லை. அங்கிருக்கும் பழைய கட்டிடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை. பாபர் மசூதிக்கு முன்பாக அந்த இடத்தில் என்ன கோவில் இருந்தது என்பதை நிரூபிக்கவில்லை. இந்த கோவில் இடிக்கப்பட்டதா என்றும் நிரூபிக்கவில்லை, என்று குறிப்பிட்டனர்.

    English summary
    Ayodhya Verdict: The main 8 points which lead the final result of whole issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X