டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாற்று தீர்ப்பு.. அயோத்தி வழக்கில் இடம்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முத்தான 5 பேர் இவர்கள்தான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

    டெல்லி: அயோத்தி வழக்கு விசாரணையில் மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்ற 3 பேர் உள்பட 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாவர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தது.

    இந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

    மகாராஷ்டிரா: சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங், காங். மும்முரம்!மகாராஷ்டிரா: சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங், காங். மும்முரம்!

    உச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சமரசம் செய்யும் நோக்கில் 3 பேரை உச்சநீதிமன்றம் நியமித்தது. அவர்கள் மத்தியஸ்தர்கள் குழு என்று அழைக்கப்பட்டனர்.

    2016-இல் பணி ஓய்வு

    2016-இல் பணி ஓய்வு

    அந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம்பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் தமிழர்கள் ஆவர். கலிஃபுல்லா காரைக்குடியில் பிறந்தவர். 1975-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 2000-இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார். சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு நடந்த தேர்தல் செல்லாது என்ற டிவிஷன் அமர்வு தீர்ப்பை மாற்றியவர் இவர். 2016-இல் பணி ஓய்வு பெற்றார்.

    நிர்மோஹி அகாரா

    நிர்மோஹி அகாரா

    வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளாக அயோத்தியில் இரு தரப்பினரிடையே சமரசம் செய்து வருகிறார். அவர் முன் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. மேலும் இவருக்கு நிர்மோஹி அகாரா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சர்வதேச மத்தியஸ்தர்கள் நிறுவனம்

    சர்வதேச மத்தியஸ்தர்கள் நிறுவனம்

    குழுவின் 3-ஆவது நபர் சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு. மத்தியஸ்தர்கள் சபையை நிறுவியவர். சர்வதேச மத்தியஸ்தர்கள் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இயக்குனராகவும் உள்ளார். ராம் லல்லா அமைப்பிற்காக அயோத்தி வழக்கில் வாதாடியவர் மற்றொரு வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன். இந்தியாவின் முதல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவர் கோவையை சேர்ந்தவர். காவிரி வழக்கிலும் வாதாடியவர். அது போல் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பராசரனும் தமிழர் ஆவார்.

    English summary
    Ayodhya Verdict: There are 5 Tamil people involved in this case hearing. 3 from Mediation Committee and 2 from lawyers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X