டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 முக்கிய அமைப்புகள்.. 14 மேல்முறையீட்டு மனுக்கள்.. அயோத்தியில் யாருக்கு என்ன வேண்டும்? பின்னணி!

அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பல முக்கியமான கோரிக்கைளை வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

    டெல்லி: அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் முக்கியமான பல கோரிக்கைளை வைத்துள்ளது. இதனால் இன்று வழங்கப்படும் தீர்ப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூறியது.

    இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    விசாரணை நடந்தது

    விசாரணை நடந்தது

    அயோத்தி வழக்கு தொடர்பாக 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வந்தது. இதில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா, இந்து மகா சபா , ராம்ஜென்ம பூமி நியாஸ் ஆகிய அமைப்புகள் முக்கிய மனுதாரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

    முக்கிய கோரிக்கைகள் மற்றும் வாதங்கள்

    முக்கிய கோரிக்கைகள் மற்றும் வாதங்கள்

    இந்த வழக்கில் இந்து அமைப்புகள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்,

    • இந்த மொத்த அயோத்தி நிலமும் ராமர் பிறந்த இடம். அவரின் ஜென்ம பூமி, அதனால் அங்கு மசூதி இருக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
      • நம்பிக்கை அடிப்படையில் பல வருடங்களாக அயோத்தி ராமர் பிறந்த இடமாக பார்க்கப்படுகிறது.
        • அயோத்தியில் தற்காலத்தில் கோவில் இல்லையென்றாலும் அது எப்போதும் ராமர் வாழ்ந்த புனித பூமிதான் என்று வாதம் வைக்கப்பட்டது .
          • அதே சமயம் அயோத்தியில் மசூதி இருந்தாலும், அந்த நிலத்திற்கு இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் வாதம் வைக்கப்பட்டது.
            • மசூதிக்குள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள் இருந்தது என்று வாதம் வைக்கப்பட்டுள்ளது.
              • 2003 அகழ்வாராய்ச்சியில் அந்த அயோத்தியில் நிலப்பகுதியில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
                • இந்துக்களின் வழிபாட்டு உரிமை காக்கப்பட வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்டது.
                  • பிரச்சனைக்குரிய இடத்தில் நிலம் இருப்பதை குரான் தவறு என்று கூறுகிறது என்றும் வாதம் வைக்கப்பட்டு இருந்தது.
                  • 1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    இந்துக்கள் என்ன நிரூபிக்க முயல்கிறார்கள்

    இந்துக்கள் என்ன நிரூபிக்க முயல்கிறார்கள்

    இந்த வழக்கில் இந்து அமைப்புகள் பின் வரும் விஷயங்களை நிரூபிக்க முயல்கிறார்கள்,

    • 11ம் நூற்றாண்டில் அயோத்தியில் கோவில் இருந்தது.
      • 1526ல் பாபர் மூலம் அயோத்தியில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டது அல்லது 17ம் நூற்றாண்டில் அவுரங்கசிப் மூலம் இடிக்கப்பட்டது.
        • ஸ்கந்த புராணம் முதல் மக்கள் நம்பிக்கை வரை, அனைத்தின் படியும் அயோத்தியே ராமர் பிறந்த இடம்.
          • மசூதியில் இருக்கும் இஸ்லாமிய எழுத்துக்கள் குரான் முறைப்படி தவறு .
    இஸ்லாமியர்கள் தரப்பு என்ன சொன்னது

    இஸ்லாமியர்கள் தரப்பு என்ன சொன்னது

    இந்த வழக்கில் இஸ்லாமியர் அமைப்புகள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் மற்றும் வாதங்கள்,

    • அயோத்தியில் பல வருடங்களாக, வரலாற்று ஆதாரத்துடன் மசூதி இருந்து வருகிறது என்று இஸ்லாமியர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
      • அங்கு கோவில் இருந்ததற்கான முறையான ஆதாரங்கள் இல்லை என்றும் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.
        • கலவரத்தின் போதுதான் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டது, அங்கு முன்பு இருந்தே சிலைகள் இல்லை என்று வாதங்கள் வைத்தனர்.
          • அயோத்தி நிலத்தில் கூட்டு வழிபாடு நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்று இஸ்லாமிய தரப்பு கூறியது.
            • அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் உள்ள இடத்தில் மையத்தில் வழிபாடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை. வெளியே இந்து வழிபாடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.
              • அந்த குறிப்பிட்ட நிலம் ராமரின் பிறந்த நிலம் கிடையாது.
                • நம்பிக்கையின் அடிப்படையில் வைக்கப்படும் வாதங்கள் பல வரலாற்று ரீதியாக முரணானது.
                  • வரலாற்று ரீதியாக மசூதி இருத்ததற்கான ஆதாரம் உள்ளது, கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை.
    இஸ்லாமிய அமைப்புகள் என்ன நிரூபிக்க முயல்கிறார்கள்

    இஸ்லாமிய அமைப்புகள் என்ன நிரூபிக்க முயல்கிறார்கள்

    இந்த வழக்கில் இஸ்லாமிய அமைப்புகள் பின் வரும் விஷயங்களை நிரூபிக்க முயல்கிறார்கள்,

    • 1528க்கு முன்பே அங்கு கோவில் இல்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்க முயல்கிறார்கள்.
      • பாபர் மசூதி 1855 மற்றும் 1934ல் தாக்கப்பட்டது. அதன்பின் 1992ல் இடிக்கப்பட்டது. இதை ஆதாரத்துடன் நிரூபிக்க முயல்கிறார்கள்.
        • அந்த நிலத்திற்கு இஸ்லாமியர்களுக்கு 1949ல் இருந்தே உரிமை இருந்துள்ளது, அங்கு தொழுகை செய்துள்ளனர், என்பதை நிரூபிக்க முயல்கிறார்கள்.

    English summary
    Ayodhya Verdict: What Hindu and Muslim bodies really want out of the Judgement?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X