டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு.. பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச மீடியாக்கள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: இந்திய வரலாற்றில் மிக முக்கியமான வழக்கான அயோத்தி நில பிரச்சினையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுக்க இந்த தீர்ப்பு பற்றி எதிர்பார்ப்பு இருந்ததை போலவே, உலகம் முழுக்கவும் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து இருந்தன.

    இரு பெரும் மத பிரிவினர் நடுவேயான வழக்கு என்பதால், இயல்பாகவே, சர்வதேச ஊடகங்களின் கவனம் சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பின் மீது இருந்தது.

    சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்டலாம் என்றும், வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்கவும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்லியுள்ளன என்று அவற்றின் இணையதள பதிப்பை வைத்து பார்க்கலாம்.

    பிபிசி

    பிபிசி

    பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட பிபிசி தனது ஆங்கில பதிப்பில் Ayodhya verdict: Indian top court gives holy site to Hindus என்று தலைப்பு வெளியிட்டுள்ளது. செய்தியின் துவக்கத்தில், வட இந்தியாவில் உள்ள அயோத்தியின் சர்ச்சைக்குரிய புனித இடம், அங்கு கட்டப்பட்ட கோவிலை விரும்பும் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் நாட்டின் DAWN பத்திரிக்கை, India's SC says temple to be built on disputed Ayodhya site, alternative land to be provided for mosque என்று தலைப்பிட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டில் 16 ஆம் நூற்றாண்டின் மசூதியை இந்து வலதுசாரிகள் இடித்த இடத்திலிருந்த சர்ச்சைக்குரிய நிலம் பற்றி, தனது தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்தது. இந்து தரப்புக்கு ஆதரவான இந்த தீர்ப்பில், அயோத்தி நிலத்தில் கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்காவின் முன்னணி நாளிதழான, The New York Times, 'Indian Court Favors Hindus in Dispute Over Ayodhya Religious Site' என்று தலைப்பிட்டுள்ளது. ஒரு காலத்தில் பாபர் மசூதி இருந்த இடத்தில், இந்துக்கள் ஒரு கோவிலைக் கட்டுவதற்கு இந்த தீர்ப்பு வழி வகுக்கிறது, ஆனால் இந்த முடிவு இனங்களிடையே பதட்டங்களை ஏற்படுத்தும் என்று பலர் கவலைப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தி வாஷிங்டன் போஸ்ட்

    தி வாஷிங்டன் போஸ்ட்

    புகழ் பெற்ற மற்றொரு முன்னணி அமெரிக்க நாளிதழான, The washington post, 'India's Supreme Court clears way for a Hindu temple at country's most disputed religious site' என்று தலைப்பிட்டுள்ளது.

    நாட்டின் மிக சர்ச்சைக்குரிய மத பிரச்சினைக்கு காரணமாக உள்ள நிலம் ஒரு அறக்கட்டளையின் கீழ், செல்லும் என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்தது, இதன் மூலம், ஒரு காலத்தில் மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து கோவிலைக் கட்டுவதற்கு வழி வகுத்துள்ளது. இவ்வாறு அந்த நாளிதழ் கூறியுள்ளது.

    துபாய்

    துபாய்

    துபாயை தலைமையிடமாக கொண்ட khaleejtimes நாளிதழ் தனது தலைப்பில், Ayodhya verdict: Temple to come up in disputed land, rules SC; Muslims to get alternative land என்று தெரிவித்துள்ளது. மேலும், சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் பொருத்தமான நிலத்தை வழங்கவும், அதே நேரத்தில் ஒரு அறக்கட்டளை அமைப்பதன் மூலம் கோயில் கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை, மத்திய அரசுக்கு, உத்தரவிட்டது, என்று கூறியுள்ளது.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    English summary
    Ayodhya verdict: Temple to come up in disputed land, rules SC; Muslims to get alternative land, and the international medias reporting detail is here including Pakistan media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X