டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை மட்டுமே ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரை செய்யலாம், மற்றபடி கொரோனாவுக்கென எந்த மருந்தையும் அவர்கள் விளம்பரப்படுத்தவோ பரிந்துரை செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

ஆயுஷ் மருத்துவர்கள் கொரோனாவுக்கான மருந்துகளை விளம்பரம் செய்வதற்கும் பரிந்துரை செய்வதற்கும் கேரள உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 6-ஆம் தேதி தடை விதித்தது. மேலும் ஆயுஷ் மருத்துவர்கள் யாரேனும் அவ்வாறு செய்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2015இன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என மாநில அதிகாரிகளுக்கு அதிகாரத்தையும் உயர்நீதிமன்றம் கொடுத்தது.

AYUSH doctors should not advertise any drugs for Covid 19

இதை எதிர்த்து டாக்டர் ஏகேபி சாத்பாவனா மிஷன் ஹோமியோ மருத்துவக் கல்லூரி சார்பில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை!இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை!

அப்போது ஆயுஷ் அமைச்சகம் கூறுகையில் ஆயுஷ் மருத்துவர்கள் கொரோனாவை குணமாக்கும் என எந்த ஒரு மருந்தையும் விளம்பரப்படுத்தக் கூடாது. எனினும் பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகளை கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மருந்துகளை கொடுக்கலாம் என தெரிவித்தது.

English summary
Centre tells Supreme court that Ayush Doctors should not advertise any drugs for Covid 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X