டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு- லக்னோ சிறப்பு கோர்ட்டில் 2,000 போலீசார் குவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றப் பகுதியில் மட்டும் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1992 டிசம்பர் 6-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது தொடர்பான கிரிமினல் வழக்கில் 28 ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Babri Masjid demolition verdict day- security tightened

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் இத்தீர்ப்பை வழங்குகிறார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீர்ப்பு வழங்குகிற லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற பகுதியில் மட்டும் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முக்கிய ரயில்நிலையங்கள், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று... அத்வானி குற்றவாளி எனில் 5 ஆண்டு சிறை தண்டனையாம்! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று... அத்வானி குற்றவாளி எனில் 5 ஆண்டு சிறை தண்டனையாம்!

உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிராவில் உச்சகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரையில் பயங்கரவாதி இமாம் அலி 18-வது நினைவு ஆண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு நாள் என்பதால் 2-வது நாளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

English summary
A special CBI court will pronounce its verdict in the Babri Masjid demolition case. Security has been tightened in all states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X