டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 26-ஆவது தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Babri Mosque demolition: 3 tire tight security installed in public places

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டுமென வலியுறுத்தி, இந்து அமைப்புகள் இன்று வெற்றித் தினமாக கொண்டாடவுள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தவும் அவை முடிவு செய்துள்ளன.

இந்து அமைப்புகளின் நிகழ்ச்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு அயோத்தி மற்றும் பைசாபாத் நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்கள் மக்கள் கூடும் இடங்களில் போலீஸார் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

English summary
Babri Mosque demolition anniversary: Tight Security installed in Railway stations, ticket counters, public gathering places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X